Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

raaga cine alai

ஏ. ஆர். ரகுமான்

எல்லை கடந்து வீசும் இசைப்புயல்
Editor
06 Jan 2020, 04:59 PM

ஏ. ஆர். ரகுமான்Image via iChef

அல்லா ரக்கா ரகுமான் என்ற ஏ.ஆர் ரகுமான். இவரின் அசல் பெயர் ஏ.எஸ். திலீப் குமார். ஜனவரி
6, 1966இல் சென்னை, இந்தியாவில் பிறந்தவர். இவரின் எண்ணற்ற திரைப்பட மற்றும் மேடை
படைப்புகள் இவருக்கு “மெட்ராஸின் மொஸார்ட்” என்ற புனைப்பெயரைப் பெற்று தந்தது.
ரகுமானின் தந்தை ஆர்.கே. சேகர், மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ரகுமான்
நான்கு வயதிலிருந்தே பியானோ வாசிக்கத் தொடங்கியவர். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினியின்
மீது ஆர்வம் கொண்ட ரகுமானுக்குத் தன் தந்தை தற்செயலாக வாங்கித் தந்த synthesizer அவரின்
ஆர்வத்தைத் தொடரவும் அதே சமயம் இசையை நேசிக்க கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளித்தது.
ரகுமானுக்கு 9 வயது இருக்கும்போது தன் தந்தையை இழந்தார். தனது 11ஆவது வயதில்
குடும்பத்தை ஆதரிக்க பியானோ வாசிப்பதைத் தொழிலாகக் தொடங்கினார். அவர் பள்ளிப்
படிப்பைப் பாதியில் நிறுத்தினாலும் அவரின் இசை அனுபவம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக
டிரினிட்டி கல்லூரியில் உதவித்தொகையோடு பட்டம் பெற வழிவகுத்தது. அங்கு அவர்
கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டமும் பெற்றார்.

ஏ. ஆர். ரகுமான்

Image via PBS

இசைக்குழுக்களில் பணியாற்றிப்பின் விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் தயாரிக்கத் தொடங்கினார்.
அவரின் திரைப்படப் பயணம் தொடங்கியது இந்தக் காலக்கட்டத்தில். 300க்கும் மேற்பட்ட
ஜிங்கிள்ஸ் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டில், ஒரு காபி விளம்பரத்தில் தனது பணிக்காக ஒரு
விருது விழாவில், இயக்குனர் மணி ரத்னத்தைச் சந்தித்த போது அவர் திரைப்படங்களுக்கு இசை
எழுத தூண்டினார். அவர்களின் முதல் திரைப்படம் ரோஜா (1992); ரகுமானின் முதல் திரைப்பட
ஒலிப்பதிவு வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இயற்றிய இசைகளும் பெற்ற
விருதுகளும் பல.
2008ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம்
இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009ஆம் ஆண்டு
பெற்று தந்தது.

ஏ. ஆர். ரகுமான்

Image via TossHub

பிற விருதுகள்:

  • இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது.
  • இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.
  • பத்மஸ்ரீ விருது
  • லாரன்ஸ் ஆலிவர் விருது
  • தமிழக திரைப்பட விருது
  • மலேசிய விருது
  • ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.
  • கோல்டன் குளோப் விருது
  • கிராமிய விருது

இசையோடு நின்று விடாமல், இவர் தற்போது Le Musk எனும் குறும்படத்தையும் 99 Songs
எனும் இந்திப் படத்தையும் இயக்குகிறார்.

ஏ. ஆர். ரகுமான்

Image via CloudFront

இசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர், ஏ. ஆர். ரகுமான்;
எல்லை கடந்து வீசும் இசைப்புயல்.

Filled Under :


*We reserve the right to delete comments that contain inappropriate content.

Related

  • {{related.category}}

    {{related.name}}

     {{related.DocumentPublishFrom | date:"dd MMMM yyyy h:mma"}}