ஜூம்பா (Zumba) என்பது 1990களில் கொலம்பிய நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான Alberto Beto Perez என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடன உடற்பயிற்சியாகும். நடனத்தையும் உடல் உறுதியையும் இணைப்பதுதான் ஜூம்பா. மற்ற உடற்பயிற்சிகளைக் காட்டிலும் இது உற்சாகமாகவும் உயிர்ப்புள்ளதாகவும் இருக்க காரணமாக இருப்பதன் ஜூம்பாவின் இசையும் நடன முறையும் தான்.
via GIPHY
பலருக்கு ஜிம்முக்கு போவது சாத்தியமாகாது. அப்படியே சென்றாலும் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற இயந்திரங்களில் ஏறி, இறங்கி விரைவில் சலிப்பு தன்மை ஏற்படக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான விறுவிறுப்பான ஓர் உடற்பயிற்சி இந்த ஜூம்பா. ஜூம்பா கற்றுக் கொள்ள வயது வரம்பு எதுமில்லை. சிறுவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் செய்யலாம். ஆனால், எது செய்தாலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டு செய்வது நல்லது.
via GIPHY
கை, கால், வயிறு, தோள், இடுப்பு என அனைத்து அங்கங்களும் சரியான மற்றும் தீவிர அசைவுடன் கூடிய நடன அசைவுகள் மூலம் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை உபயோகித்து எடை குறைக்க ஏதுவாகிறது. அதோடு, மனசோர்வை மறைத்து மனநிலை மேம்படவும் ஜூம்பா உதவுகிறது. சாக்கு போக்கு சொல்லி உடற்பயிற்சியைத் தள்ளி போடுபவர்கள் கூட உற்சாகமாக செய்யக் கூடிய எளிமையான ஓர் உடற்பயிற்சி இது.
கடந்த வெள்ளிக்கிழமையான்று ராகாவின் கலக்கல் காலை குழுவினரும் டாக்டர் Y மற்றும் டாக்டர் S உடன் இணைந்து ஜூம்பா உடற்பயிற்சி செய்தனர். நோயற்ற வாழ்வு வாழ இது போன்ற எளிய உடற்பயிற்சிகளை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.