மன அழுத்தம் என்பது தற்போது மிகவும் பொதுவான ஒரு குறைபாடாக மாறிவிட்டது. உடலில் ஏற்படும் குறைபாடுகளைக் கவனிக்கும் பலரும், மன அழுத்தத்தைக் குணப்படுத்துவதற்கு உரிய கவனம் செலுத்துவதில்லை. ஒருவர் சில நேரங்களில் வருத்தமாக காணப்படுவதும், மனச்சோர்வுடன் இருப்பதும் இயல்பு தான். ஆனால், எப்போதும் அதே போல் இருந்தால் அது மிகவும் ஆபத்தான ஒன்று.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களை உங்களால் ஒதுக்க முடியுமா? அந்த 30 நிமிடங்களுக்கு சில பயிற்சிகளைச் செய்தால் போதும். சில வாரங்களிலேயே மன அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்.
புன்னகை மருந்து!
via GIPHY
இது ஓர் எளிய அறிவியல்! மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா? மன அழுத்தத்துக்குக் காரணமாகும் கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன் உங்கள் உடலில் அதிகமாகச் சுரக்கும். வயிறு குலுங்கச் சிரிக்கிறீர்களா? கார்ட்டிசால் சுரப்பு குறைந்து, மூளையைத் தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். எனவே, புன்னகை மிகச் சிறந்த மருந்து என்பதைப் புரிந்துகொள்ளுக்கள்.
இசை – இனிமையான வரம்!
via GIPHY
`இசையால் வசமாக இதயம் எது?’ வெறும் பாடல் வரி அல்ல; மனதுக்கு உதவக்கூடிய மருத்துவ உண்மை. நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; இதயத் துடிப்பைச் சீராக்கும்; பதற்றம், கவலைகளைக் குறைக்கும். வானொலியை ஆன் செய்து, அதோடு சேர்ந்து பிடித்தமான பாடலை வாய் விட்டு பாடலாம். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன், மன அழுத்தமும் குறையும்.
உடற்பயிற்சி மனதுக்கு நல்லது
via GIPHY
உடற்பயிற்சி செய்வது நம்மை ஆரோக்கியதுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க செய்யும். ஒரு வாரத்தில் 3-5 முறை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்கள் அதிகமாகி மனநிலையை மாற்ற உதவும்.
யோகா மற்றும் தியானம்
via GIPHY
மனதொய்வில் இருந்து விடுப்பட அற்புதமான வழி யோகா ஆகும். மன ஊக்கத்திற்கு மட்டும் அல்லாமல் உடல் ஊக்கத்திற்கு யோகா வழிவகுக்கிறது. ஒரே நேரத்தில் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வதோடு ஒரு அமர்வுக்குப் பிறகு நிம்மதி அளிக்கும் பெருமை யோகாவிற்கு உண்டு. வலி மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க தியானம் முழுமையாக உதவும்.
நல்ல எண்ணங்கள் உள்ள மனிதர்களுடன் இருப்பது
via GIPHY
தனிமையில் இருப்பதில் இருந்து விடுபட்டு நல்ல எண்ணங்கள் உள்ள மனிதர்களுடன் இருப்பது மிகவும் நல்லது. நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து, கலகலப்பாக உரையாடுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் உங்களுக்கு இருந்தால், அவர்கள் அதிலிருந்து மீண்டு வர உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்.
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதக் கூடாது.
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.