கோவிட் 19 தாக்கத்தினால் 18 மார்ச் தொடங்கி திருமணம், நிச்சியதார்த்தம் போன்ற சுப காரியங்கள் தடைசெய்யப்பட்டதால் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் மன உளைச்சலுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க அரசாங்கம் திருமண விழாக்களுக்கு பச்சை கொடி காட்டியுள்ளது. ஜூலை முதலாம் தேதி தொடங்கி, நாட்டில் அனைத்து சமூக நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், மக்கள் SOP எனும் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
ஜூலை 1 தொடங்கி திருமண செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் அல்லது திருமணத்தை ஒத்திவைத்தவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விதிமுறைகள்:
- கால அளவு
அனுமதிக்கப்பட்ட திருமணம் அல்லது இதர நிகழ்ச்சிகள் 3இல் இருந்து 5 மணி நேரத்திற்குள் நடைபெறுவதை உறுதிச் செய்ய வேண்டும்.
- வருகையாளர் எண்ணிக்கை
ஒரு சமயத்தில் 250 பேருக்கு மேற்போகாத எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
- கூடல் இடைவெளி
கூடல் இடைவெளியைப் பின்பற்றுவதற்கு ஏதுவாக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் கொள்ளளவுக்கு ஏற்றவாறு வருகையாளர்களின் எண்ணிக்கை இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.
via GIPHY
4. உணவு
விருந்தினர்களுக்கு உணவு மேசையில் பரிமாறபட வேண்டும் அல்லது Buffet வடிவிலான உணவை ஏற்பாடு செய்திருந்தால், பணியாளர்கள் அந்த உணவைப் பரிமாற வேண்டும்.
5. வருகையாளர்கள் பதிவு
MY SEJAHTERA செயலி மூலம் அல்லது பெயரை எழுதி வருகையாளர்களின் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். நுழைவாயிலில், வருகையாளர்களின் எண்ணிகையை உறுதி செய்யவும் அவர்கள் உடல் வெப்ப நிலையைப் பரிசோதனை செய்யவும் வேண்டும். உடல் வெப்ப நிலை 37.5 செல்சியஸ்க்கு மேல் இருப்பவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டர்கள். ஏற்பாட்டாளர்களும் வருகையாளர்களும் சுவாசக் கவசத்தை அணிந்திருப்பது, கைத்தூய்மியைப் பயன்படுத்துவது நல்லது.
அதே வேளையில், ஆலயங்களில் நடைபெறும் திருமணங்களில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அதற்கான தளர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் வகுத்துள்ள SOPக்களைப் பின்பற்றி பாதுகாப்பான நிகழ்ச்சிகளை நடத்துவோம். அனைவரின் நலன் பேணுவோம்.
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.