“1957, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி” என்பது ஒவ்வொரு மலேசியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் நாளாகக் கருதப்படுகிறது. இங்கு, இன்று நாம் சுதந்திரமாக நமது தாய்நாட்டின் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! அவர்களின் தியாகத்தையும் போராட்டத்தையும் என்றும் நாம் நினைவுகூற வேண்டும்.
இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் “பரிவுமிக்க மலேசியா” என்பதாகும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கோவிட் 19 பரவாமல் தடுக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது இந்தக் கருப்பொருள். இத்தொற்றினை எதிர்கொள்ள மருத்துவப் பணியாளர்கள், போலீஸ்காரர்கள், ராணுவப் படையினர், உணவுப் பொருள் அனுப்புபவர்கள், ஊடக வியலாளர்கள் என முன்னிலைப் பணியாளர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி தங்கள் பணியைத் தொடர்ந்து செய்துவருகின்றனர். அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இவ்வாண்டின் கருப்பொருள் அமைந்துள்ளது. கூடிய விரைவில் கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்தும் நாம் அனைவரும் சுதந்திரம் அடைவோம் என நம்புவோம்!
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (SOP) கடைப்பிடித்து மலேசியாவின் 63வது சுதந்திர தினத்தைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவோம்!
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.