இந்திய திரையுலகில், “சூப்பர் ஸ்டார்”, “தலைவா” என்று கோடான கோடி ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் ரஜினி அவர்களைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ:
1.ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டில் இயக்குனர் கே. பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் திரைக்கு அறிமுகமானார். இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு வந்தது. “தலைவா” என்று அன்பாக அழைக்கப்படும் ரஜினி காந்த் அவர்கள் சினிமாவில் வெற்றிகரமான 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
2.அவர் எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. திரைத் துறையில் கால் பதிக்கும் முன்பு, ரஜினிகாந்த் அவர்கள் கூலியாக, தச்சராக மற்றும் பஸ் கண்டக்டராக பணியாற்றினார்.
3. நீங்கள் சூப்பர் ஸ்டாரின் உண்மையான ரசிகராக இருந்தால், ரஜினிகாந்த் என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல என உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அவரின் இயற்பெயர் சிவாஜி ராவ் காயகவாட் ஆகும். துணிச்சலான மராட்டிய போர்வீரர் மன்னர் சத்ரபதி சிவாஜி என்பவரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் ரஜினிக்கு சூட்டப்பட்டது.
4. நீங்கள் சூப்பர் ஸ்டாரின் உண்மையான ரசிகராக இருந்தால், ரஜினிகாந்த் என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல என உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அவரின் இயற்பெயர் சிவாஜி ராவ் காயகவாட் ஆகும். துணிச்சலான மராட்டிய போர்வீரர் மன்னர் சத்ரபதி சிவாஜி என்பவரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் ரஜினிக்கு சூட்டப்பட்டது.
5. ரஜினிகாந்த சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்புத் துறையில் டிப்ளோமா பயின்றார்.
6. ரஜினி அவர்கள் சினிமாவில் முதன்முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
7. ரஜினி அவர்கள் நடித்த ‘முத்து’ திரைப்படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான முதல் தமிழ் திரைப்படமாகும். அதுமட்டுமில்லாம, சந்திரமுகி திரைப்படம் துருக்கிய மற்றும் ஜெர்மன் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
8. பஸ் கண்டக்டராக சுமார் ரூ. 750 சம்பாதித்தவர், இன்று ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகராக திகழ்கிறார்.
“யானை கீழே விழுந்தால், அதனால் சீக்கிரம் எழுந்து ஓட முடியாது. ஆனால், குதிரை விழுந்தால் உடனே எழுந்து ஓடும். நான் குதிரை. சட்டுனு எழுந்து ஓடிக்கிட்டே இருப்பேன்” – தன்னைப் பற்றி ரஜினி சொன்ன வார்த்தைகள் இவை. பல தடைகளைத் தாண்டி நிற்காமல் ஓடும் குதிரைக்கு வயது 70! சூப்பர் ஸ்டாரைப் பற்றிய மேலும் பல சுவாரசியமான தகவல்களுக்கு காத்திருங்கள்!
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.