Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

hot stuff

ஒரு சகாப்தத்தின் முடிவு: பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பி அவர்களுக்கு சமர்ப்பணம்
Editor
26 Sep 2020, 10:15 AM

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ்.பி.பாலு, எஸ்.பி.பி., அல்லது பாலு என்ற பெயர்களின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் நடிகராகவும் உலா வந்தவர். இவர் திரையுலகில் கால் பதித்தது 1996ஆம் ஆண்டு. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

எஸ்.பி.பின் வாழ்க்கை வரலாறு

ஜூன் 4ஆம் தேதி, 1946ஆம் ஆண்டு, கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் எஸ்.பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். இவருக்கு இரு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் இருக்கின்றனர். எஸ்.பி.பி மனைவியின் பெயர் சாவித்திரி. பல்லவி என்ற மகளும், எஸ்.பி. சரண் என்ற மகனும் இருக்கிறார்கள்.

பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளர் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

ஒரு சகாப்தத்தின் முடிவு: பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பியின் திரையுலக பயணம்

முதன் முதலாக எஸ்.பி.பி திரைப் பாடலாகப் பாடிய “சாந்தி நிலையம்” படத்திற்காக ‘இயற்கை எனும் இளைய கன்னி’ எனும் பாடல்தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது ‘அடிமைப் பெண்’ படப் பாடலான ‘ஆயிரம் நிலவே வா’. எஸ்.பி.பின் பெயரை தமிழகமெங்கும் பிரபலமாக்கிய பாடல் இது! எஸ்.பி.பியின் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட அனைத்து பாடல்களும் சாகாவரம் பெற்றவை! இது தான் சிறந்தது என்று எதை நீங்கள் கூற முடியும்? எக்காலத்தில் கேட்டாலும் அவரின் அனைத்து பாடல்களும் நம் மனதை வருடும்.

திரையிசை பாடல்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்கள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், தொலைக்காட்சி தொடர்பு முகப்பு இசைப் பாடல்கள் என அதிலும் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்தவர்.

ஒரு சகாப்தத்தின் முடிவு: பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பியின் சாதனைகள்

எஸ்.பி.பி நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த

பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்பட பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. ஒரே நாளில் 19 பாடல்களைப் பதிவு செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தார் பாடும் நிலா எஸ்.பி.பி. தமிழக அரசின் கலைமாமணி பட்டத்தோடு சேர்த்து நான்கு முறை சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் மாநில விருது, 3 முறை கர்நாடக அரசின் மாநில விருதுகளை வென்றுள்ளார். கவுரவ டாக்டர் பட்டம், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என எண்ணற்ற விருதுகள் எஸ்.பி.பியைத் தேடி வந்துள்ளன.

ஒரு சகாப்தத்தின் முடிவு: பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பியின் பன்முக திறன்

இந்திய திரையுலகில் சிறந்த பாடகராக மட்டுமல்லாமல் சிறந்த டப்பிங் கலைஞராகவும், சிறந்த இசையமைப்பாளராகவும் சிறந்த உறுதுணை நடிகராகவும் தன் திறமைகளைக் காட்டி, ஆந்திர மாநில விருதான நந்தி விருதுகளையும் 25 முறை பெற்றுள்ளார். ‘கேளடி கண்மணி’, ‘சிகரம்’, ‘குணா’, ‘திருடா திருடா’ என பல படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது.

ஒரு சகாப்தத்தின் முடிவு: பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பின் உதவும் மனப்பான்மை

எஸ்.பி.பி தனது தந்தையின் நினைவாக எஸ்.பி.எஸ் அறக்கட்டளையைத் தொடங்கினார். அதன் மூலம் பல நல உதவிகளைச் செய்து வந்திருக்கிறார். தது அறைக்கட்டளையைத் தவிர்த்து, எண்ணற்ற அமைப்புகளுக்கு, நல்ல காரியங்களுக்குத் தன்னால் ஆன பொருள், பண உதவிகளை செய்து வந்தார்.

தான் பால் பதித்த அனைத்து பிரிவுகளிலும் பல சாதனைகளைப் படைத்த எஸ்.பி.பியின் இழப்பு இந்தியத் திரையுலகிற்கு மாபெரும் இழப்பு. இது ஒரு சகாப்தத்தின் முடிவு!

Filled Under :


*We reserve the right to delete comments that contain inappropriate content.

Related

  • {{related.category}}

    {{related.name}}

     {{related.DocumentPublishFrom | date:"dd MMMM yyyy h:mma"}}