ஒவ்வொரு குழந்தைக்கும் தன் தந்தை ‘நாயகன்’ தான்.
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.
தந்தை என்பவர் ஒரு பராமரிப்பாளர் என்றும் சொல்லலாம். விதைகளிலிருந்து அழகான பூக்களை உருவாக்கியவர். இப்போது பூக்களுக்கு நீர் பாய்ச்சுவதும் அவை ஆரோக்கியமாக வலிமையாக வளர்வதை உறுதிசெய்வதும் அவரின் கடமை. அவர்களுக்குப் போதுமான சூரிய ஒளியைத் தந்து தேவையான நேரத்தில் களையெடுப்பதும் அவசியம்.
தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக அப்பாக்கள் சுமக்கிற சுமைகள் அதிகமானவை. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்கிறார்கள்.
குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் அதே வேளை குழந்தைகளின் பராமரிப்பில் தாய்க்கும் துணையாக இருப்பது அவசியம். குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது, நல்லது சொல்லிக் கொடுப்பது, மரியாதை சொல்லி கொடுப்பது, அவர்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்பது, ஓடியாடி விளையாடுவது போன்றவை குழந்தைக்கும் தந்தைக்கும் இடையிலான பந்ததை நெருக்கமாக்கும்.
தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால் பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்துவிடும்.
அண்மையில் ஓர் ஆண் குழந்தைக்குத் தந்தையாகிய நமது அறிவிப்பாளர் சுரேஷ் அவர்களுக்கும் அவரின் மனைவிக்கும் ராகாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.