கோவிட் 19 தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால் நாட்டில் பெரும்பாலான இடங்களில் CMCO அமலில் உள்ளது. திருமண ஏற்பாடுகளைச் செய்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நவம்பர் 9 தொடங்கி டிசம்பர் 6 வரை CMCO பகுதிகளிலுள்ள ஆலயங்களில் திருமணங்களை நடத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மலேசிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள விதிமுறைகள் பின்வருமாறு:
- திருமண வைபவத்தில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
- வருகையாளர்கள், MySejahtera செயலி அல்லது வருகை பதிவு மூலம் பெயர்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.
- நுழைவாயிலில் வருகையாளர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
- வருகையாளர்கள் சுவாசக் கவசம் அணிந்திருப்பதும் தூர இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம்.
- நோய் வாய் பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆலயங்களுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படவில்லை.
- உணவு மற்றும் இனிப்புகளைப் பொட்டங்களில் மட்டுமே வழங்க வேண்டும்.
அதோடு, பொது மக்கள் தங்களின் வட்டாரத்திற்குள் இருக்கும் ஆலயங்களுக்கு மட்டுமே செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். வேறு மாவட்டங்களிலோ மாநிலங்களிலோ உள்ள கோவில்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். EMCO பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்குப் பொது மக்கள் செல்லக் கூடாது.
மேலும், இந்த அனுமதி மற்றும் SOPக்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் தீர்மானங்களுக்கு ஏற்ப இது வேறுபடலாம்.
ஆக, அரசாங்கம் வகுத்துள்ள SOPக்களைப் பின்பற்றி பாதுகாப்பான மிதமான கொண்டாடத்தை மேற்கொள்வோம். அனைவரின் நலன் பேணுவோம்.
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.