← Back to list
Covid-19 தொடர்பில் இன்று மூவாயிரத்து 300 சம்பவங்கள்!
Feb 05, 2021
Covid-19 தொடர்பில் நாட்டில் இன்று மூவாயிரத்து 391 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்றும் சிலாங்கூரில் தான் ஆக அதிகமாக ஆயிரத்து 200க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
மூவாயிரத்து 392 பேர் அத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
19 புதிய மரணங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 845ஆக உயர்ந்துள்ளது.
______
கிளாந்தானில் Kota Baru உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் இன்னும் சிவப்பு மண்டலப் பகுதிகளாக இருக்கின்றன.
Kuala Krai, Tumpat, Bachok, Machang, Tanah Merah, Pasir Mas ஆகிய மாவட்டங்கள் அதிலடங்கும்.
Jeliயும் Pasir Putihவும் மஞ்சள் மண்டலப் பகுதிகளாக உள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.
_____
பேராக், Gerikகிலுள்ள இடைநிலைப் பள்ளியொன்றில் 24 பேருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் நாளை முதல் இம்மாதம் 19ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருகின்றது.
அப்பள்ளியில் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவும், அத்தொற்று பரவாமல் இருக்கவும் அங்கு EMCO அமுல்படுத்தப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
_____
நெகிரி செம்பிலான், Senawang Tuanku Jafaar தொழிற்பேட்டையில் 61 தொழிற்சாலை ஊழியர்களுக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 41 பேர் உள்நாட்டினர் என்றும், எஞ்சிய 20 பேர் அந்நிய தொழிலாளர்கள் என்றும் சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Adham Baba தெரிவித்தார்.
_____
இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு RON 95 ரக பெட்ரோல் விலை மூன்று சென் உயர்ந்து லிட்டருக்கு 1 ரிங்கிட் 93 சென்னுக்கு விற்கப்படும்.
RON 97 ரக பெட்ரோல் 3 சென் அதிகரித்து 2 ரிங்கிட் 23 சென்னாகியுள்ளது.
டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 11 சென்னாக உயர்ந்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather