← Back to list
Covid-19 தடுப்பூசித் திட்டம் இம்மாத இறுதி வாக்கில் தொடங்கும் !
Feb 05, 2021
நாடளாவிய நிலையிலான மாபெரும் Covid-19 தடுப்பூசித் திட்டம் இம்மாத இறுதி வாக்கில் தொடங்கும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறியிருக்கிறார்.
அத்தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 60 பேருக்கு அத்தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என அவர் சொன்னார்.
Covid-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணிகளைக் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin கவனிப்பார்.
“Fasa pertama akan membabitkan sejumlah 500,000 petugas barisan hadapan yang terdiri daripada petugas kesihatan dan petugas bukan kesihatan. Fasa pertama program imunisasi ini dijadualkan tamat pada April. Manakala bagi fasa kedua pula, ia akan membabitkan kumpulan yang berisiko tinggi dijangkiti Covid-19. Sebanyak 9.4 juta orang dianggarkan akan menerima vaksin di bawah fasa kedua ini, yang akan berlangsung mulai April hingga Ogos 2021. Bagi fasa ketiga, baki penerima vaksin adalah golongan dewasa berumur 18 tahun ke atas, yang akan bermula dari bulan Mei 2021 hingga Februari 2022”
மற்றொரு நிலவரத்தில், Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து பின்பற்றி வருமாறு பிரதமர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
உயிர் மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அரசாங்கம் இருப்பதாகக் குறிப்பிட்ட Tan Sri Muhyiddin Yassin, அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனச் சுட்டிக் காட்டினார்.
“The government listens to your views, by not shutting down the economy during the MCO period so please reciprocate this gesture by complying strictly to SOPs so that we can ensure business and trade will continue to operate while at the same time help break the chain of Covid-19.”
பொது மக்களின் வேண்டுகோளுங்கிணங்க அரசாங்கம் பொருளாதாரத் துறைகளை முடக்கவில்லை.
எனவே மக்கள் தங்கள் பங்கிற்கு SOP-களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
வீட்டில் இருந்தே வேலை செய்வது மீதான அரசாங்கத்தின் உத்தரவை முதலாளிமார்கள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிச் செய்ய, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பணிக் குழு அலுவலகக் கட்டிடங்களில் நுழைந்து பரிசோதனை செய்ய அதிகாரம் உண்டு.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு தெரிவித்தார்.
“Saya percaya banyak task force yang tidak membenarkan kemasukkan orang luar dalam premis mereka, tetapi dari segi kuasa, task force operasi boleh memasuki mana-mana pejabat untuk mereka membuat pemeriksaan jika mereka fikirkan perlu. Setiap pejabat ada SOP jadi saya harap tidak perlu sehingga task force operasi memasuki tempat kerja mereka.”
MCO 2.0வின் கீழ் முக்கிய துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களில் மொத்தமுள்ள ஊழியர்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே வேலையிடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலையிடங்களை உட்படுத்திய Covid-19 cluster கள் அடையாளம் காணப்படுவது தொடர்பில் அமைச்சர் கருத்துரைத்தார்.
Covid-19 கட்டாய மருத்துவ பரிசோதனைக்காக தங்களது சம்பளத்தைக் குறைத்த முதலாளிமார்கள் குறித்து தொழிலாளர்கள் புகார் கொடுக்க ஏதுவாக மனிதவள அமைச்சு hotline சேவையை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
மருத்துவ பரிசோதனைக்கான கட்டணத் தொகையை முதலாளிகள், தொழிலாளர்கள் மீது திணிக்கக்கூடாது என அரசாங்கம் கூறியது.
கோலாலம்பூரில், KL மாநகர் மன்றத்தின் கீழுள்ள 98 இரவுச் சந்தைத் தளங்களில் 49 மட்டுமே நடப்பில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் இயங்கவுள்ளன.
அவற்றில் ஏழு இரவுச் சந்தைத் தளங்கள் மட்டுமே இன்று செயல்படத் தொடங்கவிருப்பதாக DBKLலின் லைசன்ஸ் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை கூறியது.
இரவுச் சந்தைகள் மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை செயல்படலாம் என அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.
ஜொகூர், Kota Tinggiயில் FELDA நிலக் குடியேற்றப் பகுதியொன்றில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 29 பேருக்கு kompaun அபராதம் விதிக்கப்பட்டது.
கூட்டமாக நின்று கொண்டிருந்தது, தேவையில்லாமல் ஆங்காங்கே உலாவிக் கொண்டிருந்தது, அனுமதிக்கப்படாத வணிக நடவடிக்கையில் ஈடுபட்டது ஆகியவை அவர்கள் புரிந்த தவறுகளில் அடங்கும்.
தேசிய மிருகக்காட்சி சாலை Zoo Negara, Covid-19 தாக்கத்தை எதிர்கொள்ள தற்போது அவசர நிதியைப் பயன்படுத்தி வருகிறது.
அந்நிதி மே மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இன்று காலை Sri Petaling வழித் தடத்தில் Putra Heights மற்றும் Taman Perindustrian Puchongங்கிற்கு இடையே மின் கோளாறு காரணமாக தடைபட்டிருந்த ரயில் சேவை வழக்கத்திற்குத் திரும்பியிருக்கிறது.
அதனை அடுத்து இலவச shuttle பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக Rapid KL தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather