Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MCO 2.0 நீட்டிக்கப்படுகிறது!

Feb 02, 2021


நாட்டில் மிக அதிகமாக மேலும் 21 பேர் Covid-19 தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 791 ஆக உயர்ந்துள்ளது.  

புதிதாகப் பதிவாகியுள்ள சம்பவங்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்குக் குறைந்துள்ளது.

புதிதாக மூவாயிரத்து 455 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர், ஜொகூர், KL, சபாவில் மிக அதிகமான சம்பவங்கள் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 

சரவாக்கைத் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2.0 நீட்டிக்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 18 ஆம் தேதி வரை MCO 2.0 அமலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaacob அறிவித்தார்.

அனைத்து மாநிலங்களிலும் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகமாக இருப்பதை அடுத்து அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். 

KKM mengesahkan bahawa kes harian di kesemua negeri masih menunjukkan trend peningkatan dan kadar kes positif dalam kluster-kluster tertentu juga masih tinggi iaitu sebanyak 20 hingga 40 peratus”

ஆயினும் சரவாக் மாநிலம் இந்த MCOவில் உட்படுத்தப்படவில்லை.

இதற்கு முன் அமலில் இருந்த MCO நாளை மறுநாள் வியாழக்கிழமையுடன் முடிவடைவதாக இருந்தது.

இவ்வேளையில் மாநிலம் விட்டு மாநிலம் கடக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து இருக்கும் என அமைச்சர் சொன்னார்.

“Terdapat 31 cluster yang berkaitan dengan rentas negeri, jadi ini sebagai salah satu contoh, sebab itu kita berikan penekanan bahawa rentas negeri masih tidak boleh dibenarkan kerana ianya membawa kepada peningkatan kes positif”

Perak Tengahவில் Felcra Nasaruddinனிலும் Hulu Perak Felda Bersiaவிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளை முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை கடுமையாக்கப்படுகிறது.

அதே வேளை Batang Padang Perakக்கில் Kampung Orang Asli Batu 6மில் வியாழக்கிழமை முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை EMCO அமல்படுத்தப்படவிருக்கிறது.

இவ்வேளையில், ஜொகூர் மூவார் மறு வாழ்வு மையத்தின் Blok Cயிலும்  Blok Sekolahவிலும் EMCO நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இம்மாத இறுதிக்குள் தங்களது அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை Covid-19 மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாத முதலாளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அதே வேளை சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கான தற்காலிக வேலை வாய்ப்பு வருகை அட்டையும் புதுப்பிக்கப்படாது என ஆள்பலத்துறை அமைச்சு எச்சரித்தது.

தங்களது பகுதிகளில் தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறுவோரைக் கண்டால் அது குறித்து உரிய தரப்பிடம் உடனடியாக புகார் கொடுக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

தகுந்த நடவடிக்கை எடுக்க அது காவல் துறைக்குப் பேருதவியாக இருக்கும் என அரசாங்கம் தெரிவித்தது. 

MCO SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 680 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்கள் ஆயிரம் பேருக்கு ஜொகூர் மாநில அரசு உணவுக் கூடைகளை அனுப்பி வைத்து அந்த உதவித் திட்டத்தை நிறைவு செய்திருக்கிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அந்த உணவுக் கூடைகள் அனைத்தும் மூன்று கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather