← Back to list
தொற்றில் இருந்து அதிகமானோர் மீண்டனர்!
Jan 25, 2021
நாட்டில் நேற்று COVID-19 தொற்றுக்கு ஆளானவர்களை காட்டிலும், அத்தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியது.
நேற்று மூவாயிரத்து 346 பேர் அத்தொற்றால் பாதிக்கப்பட்ட வேளை, 4 ஆயிரத்து 427 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்ததாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதில் இருந்து ஒரே நாளில் இவ்வளவு பேர் குணமடைந்திருப்பது இதுவே முதன் முறை.
இவ்வேளையில், நேற்றுப் பதிவான மொத்த சம்பவங்களில் ஆக அதிகமாக தொள்ளாயிரத்து 50 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
அதற்கடுத்த நிலையில், சபாவும், கோலாலம்பூரும் இருக்கின்றன.
இன்னும் 41 ஆயிரத்து 677 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஏறக்குறைய 242 சம்பவங்கள், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்ளை உட்படுத்திய COVID-19 cluster தொடர்பானவை என்றும், Dr Noor Hisham தெரிவித்தார்.
மொத்தமாக 9 புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; அவற்றில் 8 clusterகள் வேலை இடங்களை உட்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்களை உட்படுத்திய பரிசோதனை!
டிசம்பர் ஒன்றாம் தேதி வரை, COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 2 லட்சத்து ஐயாயிரத்திற்கும் அதிகமான அந்நிய நாட்டுத் தொழிலாளர்களில், ஏறக்குறைய 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob, மனித வள அமைச்சின் அத்தகவலை மேற்கோள் காட்டினார்.
இதனிடையே, Bentong சிறை மற்றும் பணியாளர் தங்குமிடத்தில், இன்று தொடங்கி பிப்ரவரி 8ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.
அங்கு 615 COVID-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; அதில் 574 பேர் சிறைக் கைதிகள், 34 பேர் சிறைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் என அமைச்சர் கூறினார்.
மேலும் பள்ளிகள் மூடப்பட்டன!
Kuala Terengganuவில், மேலும் 10 ஆரம்பப் பள்ளிகள், இன்று தொடங்கி ஜனவரி 30 வரை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
COVID-19 தொற்றுப் பீடித்த சில நபர்கள், சம்பந்தப்பட்ட அப்பள்ளிகளுக்குச் சென்றிருப்பது உறுதிச் செய்யப்பட்டிருப்பதே அதற்கு காரணம்.
விதிமுறையை மீறவில்லை!
மலாக்காவில் COVID-19 தனிமைப்படுத்துதல் அறிகுறியாக கையில் இளஞ்சிவப்பு நிற கை வளையம் அணிந்திருந்த முதிவர் ஒருவர், விதிமுறைகளை மீறி பெட்ரோல் நிலையத்தில் நடமாடியாக கூறப்படுவதை மாநில காவல் துறை மறுத்துள்ளது.
உண்மையில், அவர் தனது கை வளையத்தை அகற்றுவதற்காக Alor Gajah மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக அங்குச் சென்றதாக அத்துறை தெளிவுப்படுத்தியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather