← Back to list
அவசியம் இல்லாவிட்டால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம்!
Jan 20, 2021
அவசியம் இல்லாத பட்சத்தில், மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டாம் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah பொது மக்களை அறிவுறுத்தியிருக்கின்றார்.
வேறு சுகாதார காரணங்களுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வோர், COVID-19 தொற்றால் பாதிக்கப்படுவதாக எழுந்துள்ள தகவல் குறித்து பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.
மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் அத்தொற்றை தடுக்க இன்னும் ஆக்ககரமான வழிமுறைகள் குறித்து ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க, நாட்டில் COVID-19 நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் என Dr Noor Hisham கூறியுள்ளார்.
குறிப்பாக அடுத்த வாரம் பதிவாகும் தினசரி சம்பவங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே MCO 2.0 நீட்டிப்பு மீதான முடிவு அமையும் என்றாரவர்.
ஆகக் கடைசியாக நாட்டில் மூவாயிரத்து 631 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 33 விழுக்காடு அதாவது ஆயிரத்து 199 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
அடுத்தப்படியாக, சபாவும், கோலாலம்பூரும் இருக்கின்றன.
இதையடுத்து அத்தொற்றுக்காக சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 464ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மேலும் 14 மரணங்கள் பதிவாகி, மொத்த மரண எண்ணிக்கை 619ஆக உயர்ந்தது.
உணவக செயல்பாட்டு நேரம்!
MCO பகுதிகளில் உணவகங்களை திறந்து வைத்திருக்கும் நேரத்தை நீட்டிப்பது குறித்த கோரிக்கைகள் விவாதிக்கப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
உணவக நடத்துநர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather