← Back to list
புதிதாக 6 மாநிலங்களில் MCO!
Jan 19, 2021
கெடா, பேரா, நெகிரி செம்பிலான், பஹாங், திரங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமலுக்குக் கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
Covid-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை MCO அமல்படுத்தப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaacob தெரிவித்தார்.
“Secara kesimpulannya dengan pengumuman di negeri Kedah, Perak, Negeri Sembilan, Pahang, Terengganu dan Perlis bermula 22 Januari. Maka seluruh negara berada di bawah PKP kecuali Sarawak”
எனவே மாநிலம் கடக்க விரும்புவோர் காவல் துறையின் அனுமதி பெறுவது உள்ளிட்ட SOPக்களைப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
தற்போது சிலாங்கூர், பினாங்கு, ஜொகூர், மலாக்கா, சபா, கிளந்தான், KL, Putrajaya, Labuan ஆகியவற்றில் மட்டுமே MCO அமலில் உள்ளது.
மற்றொரு நிலவரத்தில், பஹாங்கில் Apartment Amber Courtட்டில் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளை முடிவுக்கு வருகிறது.
வணிகர்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி கேட்டுள்ளது குறித்து சுகாதார அமைச்சு மீண்டும் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் விவாதிக்கவிருக்கிறது.
அதன் தொடர்பிலான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம்.
இதனிடையே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள பகுதிகளில் இருக்கும் உணவகங்கள் சற்று நீண்ட நேரம் செயல்பட அனுமதிக்கப்படலாம்.
உணவகங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே என இல்லாமல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சும் கலந்து பேசி வருவதாக கூட்டரசு பிரதேச அமைச்சு தெரிவித்தது.
MCO நடைமுறையில் உள்ள இடங்களில் இருக்கும் உணவகங்களில் அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக மூவாயிரத்து 631 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 14 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் Datuk Halimah Sadiqueகிற்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அவர் ஜொகூரில் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தவிர்த்து பேரா, Padang Rengas நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Nazri Azizசும் அக்கிருமித் தொற்றுக்காகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather