Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிய வழமையில் தைப்பூசம்!

Jan 28, 2021


இன்றைய தைப்பூசத் திருநாள், புதிய வழமையில் கொண்டாடப்படுகிறது!

வழக்கமாக தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்த நாட்டிலுள்ள முருகக் கடவுளின்  திருத்தலங்களில் திரளும் பக்தர்கள் இவ்வாண்டு COVID-19 SOPக்கு ஏற்ப தங்களது வீடுகளிலேயே வழிப்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பக்தர்கள் அந்த SOPயை முறையாக பின்பற்றுவதை உறுதிச் செய்ய, காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடருகின்றன.

சிலாங்கூர் பத்துமலை தவிர்த்து Kedah Sungai Petaniயில், தேசியப் பாதுகாப்பு மன்றம் MKNனின் ஆலோசனையின் பேரில் ஏறக்குறைய 28 காவல் துறை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்றைய வழிபாட்டிற்காக கோவிலில் செயலவை உறுப்பினர்கள் உட்பட ஐவர், மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் Kuala Muda மாவட்ட காவல் துறைத் தலைவர்  ACP Adzli Abu Shah கூறியுள்ளார்.

இவ்வேளையில், பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ கல்லுமலை ஆகிய முருகன்  திருத்தலங்களிலும் பக்தர்கள்  இன்றி, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தைப்பூசத்தையொட்டி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரசித்திப் பெற்ற முருகன் திருத்தலங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் நேரடி ஒளிப்பரப்பை, Astro Vaanavil, Vinmeen HD, Astro GO மற்றும் Astro Ulagam வாயிலாக நீங்கள் கண்டு களிக்கலாம்.

ராகா மற்றும் Syok செயலியில் ஒளியேறும் 24 மணி நேரப் பக்திப் பாடல்களையும் கேட்கலாம்.

சிலாங்கூரில் COVID-19 தினசரி எண்ணிக்கை ஏன் அதிகம்?

சிலாங்கூரில் தினசரிப் பதிவாகும் COVID19 சம்பவங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு, மக்கள் தொகையும் ஒரு காரணம் என மாநில Menteri Besar கூறியுள்ளார்.

இதையடுத்து, COVID-19 தொற்றுக்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இதுவரை 19 ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்னும் 50 ஆயிரம் பரிசோதனைகளுக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக Menteri Besar கூறியுள்ளார்.

அத்தொற்றுப் பீடித்தவர்களை தனிமைப்படுத்தி, மற்றவர்களுக்கு அத்தொற்று பரவாமல் அதனை கட்டுப்படுத்த இப்பரிசோதனைகள் உதவுவதாக அவர் சொன்னார்.

நாட்டில் நேற்றுப் பதிவான மூவாயிரத்து 680 COVID-19 சம்பவங்களில், 800க்கும் அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியிருக்கின்றன.

இவ்வேளையில், நாட்டில் நேற்று COVID-19 தொற்று தொடர்பான 17 புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதில் 15 clusterகள் வேலையிடம் தொடர்பானவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வேலையிடம் தொடர்பான அந்த clusterகளில் ஒன்று, ஜொகூர் Muarரிலுள்ள தொழிற்சாலையை உட்படுத்தியதாகும். 

அந்த clusterரின் கீழ், 500 க்கும் அதிகமான COVID-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இன்னும் 366 clusterகள் தீவிரமாக இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.

மோசடி கும்பல் கைது!

COVID-19 பரிசோதனைக்கான போலி மருத்துவ அறிக்கைகளை விற்று வந்த பாகிஸ்தானிய மோசடி கும்பல் பிடிப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் செயப்படத் தொடங்கிய அந்த மோசடி கும்பல், இந்நாட்டிலுள்ள பாகிஸ்தானியர்களை மட்டும் குறி வைத்து, போலி  மருத்துவ அறிக்கைகளை தயாரித்து அவற்றை தலா, 300 ரிங்கிட் விலையில் விற்று வந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 50 பேருக்கு அவ்வாறு போலி மருத்து அறிக்கைகளை அக்கும்பல் விற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

விலையை உயர்த்தாதீர்கள்....அமைச்சு எச்சரிக்கை!

கணினி, திறன்பேசி உள்ளிட்ட மின் தொடர்பு சாதனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், அவற்றின் விலையை உயர்த்த வேண்டாம் என வியாபாரிகள் எச்சரிக்கப்படுகின்றனர்.

அப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக தாங்கள் தொடர்ந்து புகார்கள் பெற்று வருவதாக, உள்நாட்டு வாணிக, கூட்டுரவு, பயனீட்டு அமைச்சு கூறியுள்ளது.

தேவையில்லாமல் விலையை அதிகரிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களுக்கு கூடியப்பட்சம் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்றாண்டுகள் சிறை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம் என அமைச்சு எச்சரித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather