← Back to list
Anfield-டில் உச்சக்கட்ட போர்!
Jan 17, 2021
இங்லீஷ் கால்பந்து லீக்கின் உச்சக் கட்டம் என வர்ணிக்கப்படும் #ManchesterUnited - #Liverpool அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தால் நாளை அதிகாலை Anfield அதிரப் போகிறது.
புத்தாண்டில் புதுத் தெம்புடன் முதலிடத்தில் அமர்ந்து அசத்தும் Manchester United-டை, லீக்கில் சொந்த இடத்தில் தோல்வியா? அப்படியென்றால் என்ன என கேட்கும் அளவுக்கு 'கெத்து' காட்டும் Liverpool வரவேற்கிறது.
இப்பருவம் உண்மையிலேயே வித்தியாசமான பருவம் தான். இந்த வாரம் முதலிடத்தில் இருக்கும் அணி, அடுத்த வாரமே பார்த்தால் ஐந்தாவது ஆறாவது இடத்திற்கு கீழிறங்கி போயிருக்கும்.
அதே போல், 6-வது 7-வது இடங்களில் இருக்கும் அணி, திடீரென 2-வது 3-வது இடத்திற்கு முன்னேறியிருக்கும். அந்த அளவுக்கு போட்டித் தன்மை மிக்க பருவமாக குறிப்பாக கடந்த பருவம் போல் இல்லாமல் இருக்கிறது.
நடப்பு வெற்றியாளர் என்ற முறையில் கிறிஸ்மஸ் வரை Liverpool முதலிடத்தில் இருந்தது ஆச்சர்யமல்ல. பிறகு என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? வேறு என்ன, Manchester United தான்!
இப்பருவத்தில் சொந்த இடத்தில் நடைபெற்ற முதல் 4 ஆட்டங்களில் மூன்றில் தோல்வி கண்டு, ரசிகர்களிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டது. அதுவும் #Tottenham -மிடம் 1-6 என படுதோல்வி கண்டது, #Arsenal -லிடம் தோல்வி கண்டது என ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றியது. ஒரு கட்டத்தில் அது இருந்த இடம் 16.
ஆனால், திடீர் பலம் பெற்று அடுத்தடுத்து 3 புள்ளிகளைப் பெற்று படிப்படியாக முன்னேறியது. அப்போதும் யாரும் United-டை அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இன்று அவ்வணி இருப்பதோ முதலிடத்தில்.
வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், எதிரணிகளுக்கு, குறிப்பாக லீக் பட்டத்திற்கான போட்டியில் இருக்கும் அணிகளுக்கு உள்ளுக்குள் ஒரு வித கலக்கம் இருக்கத் தான் செய்யும்.
Liverpool-லை விட ஒரு கட்டத்தில் 9 புள்ளிகளில் பின் தங்கியிருந்த United, 3 புள்ளிகள் அதிகம் பெற்று, நாளை #Anfield செல்கிறது.
இங்லீஷ் கால்பந்தில் இரு பெரும் வைரிகள் மீண்டும் ஒன்றாக லீக் பட்டத்திற்கான போட்டியில் வந்து நிற்பது, எல்லா ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
ஆகக் கடைசியாக இப்படியொரு சூழ்நிலை நிலவியது 2009-ல் தான். அப்பருவத்தில் United வெற்றியாளராகவும், Liverpool இரண்டாவதாகவும் வந்தன. அதன் பிறகு, குறிப்பாக அப்போதைய நிர்வாகி #SirAlexFerguson ஓய்வுப் பெற்ற 2013-க்கு பிறகு, நிலைமையே மாறியது.
United சரிவை நோக்கியும், #JurgenKlopp-பின் அதிரடியில் Liverpool மீட்சியை நோக்கியும் நகர்ந்தன. முக்கியமாக கடந்த 2 பருவங்களாக Liverpool காட்டிய ஆட்டத்தை நடுநிலையாளர்கள் மட்டுமின்றி, பரம வைரிகள் கூட ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவ்வணி அசத்தியது.
2018-2019 பருவத்தில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் Manchester City-யிடம் லீக் கிண்ணத்தை நழுவ விட்ட Liverpool, கடந்த பருவத்தில் மிக மிக வசதியான நிலையில் லீக் கிண்ணத்தை முத்தமிட்டது.
30 ஆண்டுகளில் Liverpool லீக் கிண்ணத்தை வென்றது அதுவே முதன் முறை.
ஆக, இரு பலம் பொருந்திய, அதை விட முதலிரு இடங்களை அலங்கரிக்க தகுதிப் பெற்ற அணிகள் என்ற வகையில் கால்பந்து ரசிகர்கள் நாளை ஆட்டத்தைப் பார்க்கவிருக்கின்றனர்.
என்னதான் முதலிடத்தில் இருந்தாலும், லீக் பயணம் இன்னும் நீண்ட நாட்களுக்கு உள்ளது என்பதை Manchester United அறியாமல் இல்லை. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆக, மிகவும் கவனமாகத் தான் அணுக வேண்டும் என United நிர்வாகி #Ole Gunnar Solskjaer கூறியிருக்கிறார்.
அதே சமயம் நடப்பு வெற்றியாளர் என்ற 'கெத்தை' அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்கும் நிலையில் Liverpool இல்லை. கண்டிப்பாக தனது கோட்டையில், அடுத்த பலிகடாவாக United-டை ஆக்குவதில் முழு வீச்சில் களமிறங்கும்.
ஆக, கால்பந்து இரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவும், இரு அணி இரசிகர்களுக்கும் ஒரு வித படபடப்பாகவும் அவ்வாட்டம் அமையப் போகிறது.
United வெற்றிப் பெற்றால், Liverpool-லை விட 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை வலுப்படுத்திக் கொள்ளும். அதே Liverpool வென்றால், கோல் வித்தியாசம் அதற்கு சாதகமாக இருப்பதால் அவ்வணி முதலிடத்திற்குத் திரும்பும்.
எது எப்படியோ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்சக் கட்ட போருக்கு Anfield அரங்கம் தயாராகிறது.
சரி ஆட்ட முடிவு மீதான உங்களின் ஆருடம் என்ன? கீழ பதிவுச் செய்யுங்கள்.
- சவுரியம்மாள் இராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather