← Back to list
COVID-19: மே மாதத்திற்குள் கட்டுப்படுத்த முடியும்!
Jan 14, 2021
நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கையை வரும் மே மாதத்திற்குள் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு நம்புகிறது.
மக்கள் SOPகளை முறையாக பின்பற்றினால் இது சாத்தியமாகும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவை இருந்தால், சுவாசக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற SOPகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றாரவர்.
நாட்டில் நேற்று ஈராயிரத்து 985 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் மிக அதிகமான சம்பவங்களை உட்படுத்திய மாநிலங்களாக சிலாங்கூர், சபா மற்றும் ஜொகூர் திகழ்கின்றன.
அத்தொற்றுக்காக சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இவ்வேளையில், UKவில் உருமாறிய COVID-19 கிருமி தொற்றுக்கு ஆளானதாக கூறப்படும் மலேசியர், சிகிச்சைப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.
UKவில் இருந்து திரும்பியவுடனேயே அந்த 22 வயது நபர் பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதால், அவர் யாருடனும் நெருங்கிய தொடர்பில் இல்லை என சுகாதார அமைச்சு கூறியது.
அந்த உருமாறிய கொரோனாத் தொற்றை உட்படுத்தி இதுவரை உள்ளூரில் எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்பதையும் அமைச்சு முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.
பாடநூல் செயலி!
பள்ளி மாணவர்களுக்கு இலக்கயியல் பாட நூல் வசதியை ஏற்படுத்தித் தர, KPM eTextbook Reader என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை மாணவர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என கல்வி அமைச்சு தெரிவித்தது.
பயண பெர்மிட் விண்ணப்பம்!
அதி முக்கிய அலுவல்களுக்காக மாநிலம் மற்றும் மாவட்டம் விட்டு கடக்க வேண்டிய தேவையுள்ளவர்கள், தேசிய பாதுகாப்பு மன்றம் MKNனின் Telegram சேவை அல்லது PDRMமின் அகப்பக்கத்தில் இருந்து, பெர்மிட் விண்ணப்பப் பாரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather