Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிய வரலாறு படைத்தது Covid-19!

Jan 12, 2021


ஒரே நாளில் மிக உயரிய எண்ணிக்கையாக நாட்டில் இன்று Covid-19 தொடர்பில் மூவாயிரத்து 309 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 7 சம்பவங்களும் அடுத்து ஜொகூரில் 442 சம்பவங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நால்வர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால், மொத்த மரண எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது.

----- 

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் குறிப்பிட்ட சில காரணங்களின் அடிப்படையில் மாநில எல்லைகளைக் கடக்கும் விதிமுறையில் அரசாங்கம் தளர்வு வழங்க இணங்கியிருக்கிறது.

இதனிடையே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களிலும் கூட்டரசு பிரதேசங்களிலும் உணவகங்களும், பலசரக்கு விற்பனை கடைகளும் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.

எண்ணெய் நிலையங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்றாரவர்.  

----- 

நாட்டில் அவசர நிலை அமலில் இருக்கும் காலம் நெடுகிலும், நீதி பரிபாலனத்துறை தொடர்ந்து செயல்பட்டு வரும் என பிரதமர் உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்.

அரசாங்கம் நீதித் துறையின் சுதந்திரத்தைத் தொடர்ந்து தற்காத்து வரும்.

நீதிமன்ற விவகாரங்களில் ஒரு போதும் தலையிடாது என Tan Sri Muhyiddin Yassin திட்டவட்டமாகக் கூறினார்.   

இன்று அறிவிக்கப்பட்ட அவசர நிலை, ராணுவப் புரட்சி அல்ல; ஊரடங்குச் சட்டமும் அமல்படுத்தப்படாது என பிரதமர் சொன்னார். 

அதோடு நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறை, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றி பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும் என்பதை Muhyiddin சுட்டிக் காட்டினார். 

----- 

இதனிடையே நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலை அமலாக்கம் நியாயமான முறையிலும் வெளிப்படையாகவும் இருப்பதை உறுதிச் செய்ய சுயேட்சை செயற்குழுவொன்று ஏற்படுத்தப்படும் என பிரதமர் கூறியிருக்கிறார்.

அச்செயற்குழுவில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என மலாயா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மூத்த விரிவுரையாளர் மகேசன் அய்யாவு கூறுகிறார்.

----- 

Sesi persekolahan tetap bermula pada 20 Januari 2021 di sebalik pelaksanaan PKP di beberapa buah negeri sehingga 26 Januari depan

இவ்வாண்டுக்கான கல்வித் தவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததைப் போல் இம்மாதம் 20 ஆம் தேதி தொடங்கும்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிச் செல்வர்.

ஆயினும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 2.0 அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களிலும் கூட்டரசு பிரதேசங்களிலும் முக்கியத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குச் செல்வர்.

அப்பகுதிகளில் ஆரம்பப்பள்ளிகள் மற்றும் ஒன்றாம் படிவத்தில் இருந்து நான்காம் படிவம் வரை பயிலும் மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்பர் என கல்வியமைச்சு அறிவித்தது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather