Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MCO: மூன்று திருத்தலங்கள் பொது மக்களுக்கு மூடப்படுகின்றன!

Jan 12, 2021


பத்துமலை திருத்தலம், KL ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், Puduவில் உள்ள கோட்டுமலைப் பிள்ளையார் கோவில் ஆகிய வழிப்பாட்டு தலங்கள் நாளை தொடங்கி ஜனவரி 26ஆம் தேதி வரை பொது மக்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அறிவித்துள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு தொடங்கி பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர், சபா, கோலாலம்பூர், புத்ராஜெயா  மற்றும் லாபுவானில் MCO அமுலுக்கு வருவதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நேற்று அறிவித்தார்.

பகாங், பேரா, நெகிரி செம்பிலான், கெடா, திரங்கானு, மற்றும் Kelantan-னில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கொண்டு வரப்படுகிறது.

பெர்லீஸ் மற்றும் சரவாக்கில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும்.

நாடு முழுவதும் மாநிலம் விட்டு மாநிலம் கடக்க முடியாது.

MCO அமுல்படுத்தப்படும் மாநிலங்களில் மாவட்டங்களை கடக்கவும் அனுமதியில்லை என பிரதமர் தெரிவித்தார்.

MCO அமுல்படுத்தப்படவுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கான மேலும் சில கட்டுப்பாடுகள்:

•           அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஒரு நேரத்தில் ஒரு வீட்டில் இருந்து இருவர் மட்டுமே   வெளியே செல்ல முடியும்.

•           ஒரு வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும்.

•           வீட்டில் இருந்து 10 கிலோமீட்டருக்கு உட்பட்டு மட்டுமே பயணிக்க முடியும்.

•           உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண முடியாது; பொட்டலமிடப்பட்ட உணவுகளை வாங்கிச் செல்லலாம்.

•           SPM, STPM பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் கடுமையாக்கப்பட்ட SOPகளுக்கு மத்தியில் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

•           ஆரம்ப மற்றும் முதலாம் படிவம் முதல் 4ஆம் படிவம் வரைக்குமான மாணவர்கள் வீட்டில் இருந்தப்படியே கல்வி கற்பார்கள் .

•           திருமணம், விருந்து, கூட்டங்கள், கருத்தரங்குகள், தைப்பூசம் உள்ளிட்ட சமய பெருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதியில்லை.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather