← Back to list
தொடர்ந்து மூவாயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள்!
Jan 27, 2021
நாட்டில் புதிதாக மூவாயிரத்து 680 Covid-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜொகூர், சிலாங்கூர், KL, சபா, பேரா ஆகிய மாநிலங்களில் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் எழுவர் அக்கிருமித் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.
உள்துறை அமைச்சர் Datuk Seri Hamzah Zainudin கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீடு திரும்பியிருக்கிறார்.
அவர் Covid-19 தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் Covid-19 தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வுகள் தொடங்கி விட்டன.
சுகாதார அமைச்சு அதனைத் தெரிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் 9 மருத்துவமனைகளைச் சேர்ந்த மூவாயிரம் தன்னார்வலர்களை அந்த ஆய்வு உட்படுத்தியிருப்பதாக அது கூறியது.
திரங்கானுவில் இரு பகுதிகளில் இன்று நள்ளிரவு தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
Dungun புனர்வாழ்வு மையம், Marang தடுப்பு மையத்தின் சுற்று வட்டாரம் ஆகியவையே அப்பகுதிகள் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
பினாங்கில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று காலை மாநில அரசின் உத்தரவை மீறி ஆலயமொன்றில் இருந்து ரதம் புறப்பட்டதை அம்மாநில அரசு சாடியிருக்கிறது.
சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநில இரண்டாவது துணை முதலமைச்சர் பேராசிரியர் Dr. P. ராமசாமி கூறினார்.
Covid-19 பரவல் காரணமாக பினாங்கில் ரத ஊர்வலகத்திற்கு அனுமதி கொடுக்கப்படாது என முன்னதாக மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, கர்நாடகாவின் பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்ட, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இன்று விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்க வேண்டியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவைத் தவிர்த்து மேலும் இருவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather