← Back to list
பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டம் இல்லை!
Jan 08, 2021
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்துக்குக் குறைந்துள்ளது.
புதிதாக ஈராயிரத்து 643 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 86 சம்பவங்களும் அடுத்து சபாவில் 401 சம்பவங்களும் தொடர்ந்து ஜொகூரில் 298 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
16 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் Covid-19 நிலவரம் கவலையளிக்கும் வகையில் இருப்பதைத் தொடர்ந்து அக்கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க உதவும் அணுகுமுறைகளை தேசிய பாதுகாப்பு மன்றம் அணுக்கமாக ஆராய்ந்து வருகிறது.
சமூகத் துறைகளை உட்படுத்திய தர செயல்பாட்டு நடைமுறைகளை துல்லிதமாக ஆய்வு செய்வதும் அதில் அடங்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
“Kita sedang meneliti dan juga menyediakan SOP dan berbagai-bagai lagi yang dicadangkan supaya apabila kita umumkan nanti, ianya boleh diterima oleh semua”
அதன் தொடர்பில் பிரதமர் வரும் திங்கட்கிழமை அறிவிப்பார் என்றாரவர்.
இவ்வேளையில், Covid-19னுக்கான SOPக்களை மீறிதற்காக நேற்று நாடு முழுவதும் 277 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் சொன்னார்.
நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும் தர செயல்பாட்டு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் திரளும் பகுதிகளில் சோதனைகள் வலுப்படுத்தப்படும் என PDRM தெரிவித்தது.
கட்டுமானத் தளங்களில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டாலும், அப்பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் SOPக்களைத் தொடர்ந்து பின்பற்றி வருவது மிக அவசியம் என அது வலியுறுத்தியது.
Covid-19 தொற்று உறுதிச் செய்யப்பட்ட தங்களது அந்நிய தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான மையங்களை அவர்களது முதலாளிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஆள்பலத்துறை அமைச்சு அவ்வாறு தெரிவித்திருக்கிறது.
அதோடு சிகிச்சைக் கட்டணம், அத்தொழிலாளர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் காலம் வரை அவர்களுக்கான செலவினங்கள் ஆகியவற்றையும் முதலாளிகளே ஏற்க வேண்டும்.
மேலும் அதிகரித்து வரும் Covid-19 சம்பவங்களைக் கட்டுப்படுத்த முதலாளிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.
பினாங்கில் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநில இரண்டாவது துணை முதலமைச்சர் பேராசிரியர் P. ராமசாமி தெரிவித்திருக்கிறார்.
ரத ஊர்வலங்கள் இருக்காது; தேங்காய் உடைத்தல், தண்ணீர் பந்தல்கள் போடுவது, இலவச உணவுகள் வழங்குவது, காவடி ஏந்துவது, பால் குடங்கள் எடுப்பது, முடி இறக்குதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
தைப்பூசத்தின் போது ஜனவரி 27 ஆம் தேதியில் இருந்து 29 ஆம் தேதி வரை பக்தர்கள் கோவில்களுக்குச் செல்லவும் முடியாது; அவர்கள் தத்தம் வீடுகளிலேயே இருந்து பூஜைகளை மேற்கொள்வது நல்லது என அவர் ஆலோசனை கூறினார்.
தைப்பூசத்தால் புதிய clusterகள் ஏதும் உருவாகக்கூடாது; Covid-19 பரவலைத் தடுக்கவும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ராமசாமி சொன்னார்.
பினாங்கில் இரு ஆலயங்களுக்கு மட்டுமே தைப்பூச பூஜைகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பஹாங், திரங்கானு, கிளந்தான், ஜொகூர், பேரா என ஐந்து மாநிலங்களில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் இருக்கின்றனர்.
பஹாங்கில் 9 மாவட்டங்களில் தொடர்ந்து மிக அதிகமாக 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிவாரண மையங்களில் உள்ளனர்.
அடுத்து திரங்கானுவில் மிக அதிகமாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக மையங்களில் இருக்கின்றனர்.
கிளந்தான், ஜொகூர், பேரா ஆகிய மாநிலங்களில் ஏழாயிரத்து 200க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
RON95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 84 சென்னுக்கு RON97 லிட்டருக்கு 2 ரிங்கிட் 14 சென்னுக்கும் விற்கப்படும்.
டீசல் ஒரு சென் அதிகரித்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 2 சென்னாகியிருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather