← Back to list
வேலையிடங்களை உட்படுத்தி அதிகரிக்கும் Cluster-கள்!
Feb 09, 2021
நாட்டில் வேலையிடம் தொடர்பான COVID-19 clusterகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 13 clusterகளில் 11 வேலையிடம் தொடர்பானது என, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
அதில் தலா 4 clusterகள் ஜொகூரையும், சிலாங்கூரையும் உட்படுத்தியுள்ளன.
அந்த 11 clusterகளின் கீழ் பதிவான 354 கொரோனா சம்பவங்களையும் சேர்த்து, நாட்டில் நேற்று மொத்தமாக மூவாயிரத்து 100 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதே சமயம், இதுவரை இல்லாத அளவுக்கு, மிக உயர்ந்த எண்ணிக்கையாக ஒரே நாளில் 24 பேர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் 51 ஆயிரத்து 977 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
COVID-19 பரவல்: மூலக் காரணம் கண்டறியப்பட வேண்டும்!
சிலாங்கூரில் COVID-19 சம்பவங்களை தொடர்ந்து குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, முதலில் அத்தொற்றுக்கான மூலக் காரணத்தை அம்மாநிலம் கண்டறியவிருக்கின்றது.
இதன் தொடர்பான தனது கருத்துகளை பகிர்ந்துக் கொள்கிறார், சிலாங்கூர் மாநிலத்தின் COVID-19 பணிக் குழு தலைவர் Datuk Seri Dr Dzulkefly Ahmad…
“we must look at beyond just numbers as well as attempt at understanding the spread and dispersion – the K-value that Ive always talked on rather than the R-naught value that will be to understand the super spreaders events, and the super spreaders individuals that we have been talking about so we must also consider enforcement on this.”
COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கையை மட்டும் பற்றி அதிகம் யோசிக்காமல், அத்தொற்றுக்கான காரணிகள் மீது கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.
வேலையிடங்களில் அதிகம் பரவி வரும் COVID-19 சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான அமுலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாரவர்.
நேற்று சிலாங்கூரில் மட்டும் மொத்தம் ஆயிரத்து 196 COVID-19 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather