Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: கட்டுப்பாடுகள் தொடங்கின!

Jan 13, 2021


COVID-19 சம்பவங்களை கட்டுப்படுத்த சிலாங்கூர், பினாங்கு, கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா, ஜொகூர், சபா மற்றும் லாபுவானில் அரசாங்கம் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2.0 இன்று தொடங்கியுள்ளது!

அப்பகுதிகளில் இரவுச் சந்தை, முடித்திருத்தும் சேவை, பகுதி நேர tuition வகுப்புகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.

சமூக ஒன்றுகூடுதல்களை உட்படுத்திய கூட்டங்கள், திருமணங்கள், நிச்சயதார்த்த சடங்குகள், நிறைவாண்டு விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகின்றது.

MCO பகுதிகளில் உள்ள உணவக நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்தும் அவர் விவரித்தார்.

உணவு அனுப்பும் சேவைக்கு அனுமதி உண்டு என்றும் அவர் கூறினார்.

தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

“hospital dan klinik boleh beroperasi 24 jam, kedai farmasi 6am-8pm, kedai keperluan harian 6am-8pm, stesen minyak 6am-10pm kecuali di lebuh ray akita benarkan beroperasi 24 jam. Pasar harian dan pasar tani boleh beroperasi dari jam 7am- 2pm” 

இதனிடையே, சொந்த ஊர்களில் இருப்போர், தங்களது வீடுகளுக்கு திரும்ப வரும் வெள்ளிக்கிழமை வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சில சூழ்நிலைகள் கருதி, அத்தளர்வு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சொன்னார்.

"mereka yang telah pun membeli tiket penerbangan, kita tidak minta mereka membatalkan tetapi diteruskan penerbangan mereka. Begitu juga dengan mereka yang telah membeli tiket bas express, boleh menjalankan proses mereka. Dan kelonggaran ini hanya diberikan kepada mereka yang mempunyai sebab-sebab tertentu.” 

எனினும், சம்பந்தப்பட்டவர்கள் முதலில் காவல் துறையிடம் இருந்து தங்களது பயணங்களுக்கான அனுமதி கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றாரவர்.

ஆசிரியர்கள் COVID-19 பரிசோதனை செய்ய வேண்டியதில்லை!

ஜனவரி 20ஆம் தேதி புதிய ஆண்டுக்கான பள்ளித் தவணை தொடங்கும் போது, பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய ஆசிரியர்கள் COVID-19 பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை.

ஆனால், அவர்கள் SOPகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

உடல் நலப் பிரச்னை கொண்ட ஆசிரியர்கள், தங்களது பள்ளி நிர்வாகத்துடன் கலந்துப் பேசி இணையம் வாயிலாக பாடங்கள் போதிக்க அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சு தெரிவித்தது.

மற்றொரு நிலவரத்தில், MCO அமுலில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தனியார் பாலர் பள்ளிகளில் பயிலும் தங்களது பிள்ளைகளை வகுப்புகளுக்கு அனுப்புவதா, வேண்டாமா என்பதை தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

சில பாலர் பள்ளி நடத்துநர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், அவற்றை திறக்க அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

வேலைக்குச் செல்லும் சில பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளை பராமரித்துக் கொள்ளும் தேவை இருப்பதை அமைச்சு குறிப்பிட்டது.

சாலை தடுப்புச் சோதனைகள்!

நேற்று நள்ளிரவு தொடங்கி நாட்டில் 300க்கும் அதிகமான சாலை தடுப்புச் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மாநிலம் விட்டு மாநிலம் கடக்கவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 2.0 விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாவட்டத்தை கடக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்து அச்சோதனைகள் தொடங்கியதாக தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador கூறியுள்ளார்.

அச்சோதனைப் பணிகளில் கிட்டத்தட்ட 48 ஆயிரம் காவல் வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

அவர்களது எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என IGP தெரிவித்தார்.

நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டுப்பாடுகளை அடுத்து, காவல் வீரர்களின் விடுமுறையும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகவும் IGP தெரிவித்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather