Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கெடாவில் தைப்பூச விடுமுறை இல்லை!

Jan 20, 2021


நாட்டின் Covid-19 தொடர்பில் புதிதாகப் பதிவாகியுள்ள சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டாவது முறையாக நாலாயிரத்தைத் தாண்டியுள்ளது. 

புதிதாக நாலாயிரத்து 8 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 391 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

அடுத்து KL, ஜொகூர், சபா ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் 11 பேர் அக்கிருமித் தொற்றால் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது.

Covid-19 பரவலுக்கு எதிரான போராட்டத்தில் முன் வரிசைப் பணியாளராக இருந்த அரசாங்க மருத்துவர் ஒருவர் மிகுதியான களைப்பு காரணமாக மரணமடையவில்லை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

அம்மருத்துவர் வேறு சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்ததாக Tan Sri Dr. Noor Hisham Abdullah தெளிவுபடுத்தினார்.

மரணமடைந்த மருத்துவரின் இறுதிப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் அவ்விளக்கத்தை அளித்தார்.

கெடாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருவதால் இவ்வாண்டு அம்மாநிலத்தில் தைப்பூசக் கொண்டாட்டம்  இருக்காது. 

எனவே இவ்வாண்டு தைப்பூசத்தையொட்டி சம்பவ விடுமுறை இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

MCOவால் அந்த வருடாந்திர நிகழ்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில Menteri Besar தெரிவித்தார்.

காவடி எடுத்தல், ரத ஊர்வலம் ஆகியவற்றுக்கும் அனுமதியில்லை என அவர் கூறியிருப்பதாக Free Malaysia Today தகவல் வெளியிட்டுள்ளது.

பேராவில் Kg. Orang Asli Batu 6, Jalan Pahang, Batang Padangங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது. 

நாளை முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை அங்கு EMCO அமலில் இருக்கும்.

உள்துறை அமைச்சர் Datuk Seri Hamzah Zainudin, Covid-19 தொற்றுக்காக PPUM மில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலை சீராக இருப்பதாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் கூறியிருக்கிறது.

அவரது உடல் நிலை குறித்து உள்துறை அமைச்சரின் அலுவலகம் மட்டுமே ஆகக் கடைசித் தகவல்களை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தேசிய உயர்க்கல்வி நிதிக்கழகத்திடம் இருந்து கடன் பெற்றவர்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை ஒத்தி வைப்பதற்கான சலுகைக்கு விண்ணப்பிக்கலாம்.

முதல் மூன்று மாதங்களுக்கு Moratorium சலுகைக்கு அவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என PTPTN கூறியது.

இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்; ஆதரவு பத்திரம் ஏதும் அவசியம் இல்லை. 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தொழில்முனைவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு, அவர்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க TEKUN NASIONAL இணங்கியுள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பரிவுமிக்க உதவித் திட்டம் BPRரின் hotline சேவை இன்று முதல் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வரை வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அச்சேவை வழங்கப்படும். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather