Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MCO 2.0: அதிகாரம் இனி ராணுவத்தின் கையில்!

Jan 15, 2021


நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 2.0 விதிமுறைகளை மீறுவோரை கைது செய்து, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இனி, ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகிறது!

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஊடுருவல் சம்பவங்களை மட்டுமே கையாண்டு வந்த ஆயுதப் படை இனி MCO விதிமுறைகள் மீறுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றாரவர்.

ஆயுதப் படையினருக்கான இந்த அதிகாரம், அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் மாதம் வரை அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் சொன்னார்.

மீட்சிக்கான மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் RMCO மற்றும் CMCO விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்தால், அப்பகுதிகளுக்கான ஆணைகள் மாறலாம்;

தேவை ஏற்பட்டால் அப்பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCOஅறிவிக்கப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு பகாங், பேரா, நெகிரி செம்பிலான், கெடா, திரங்கானு, Kelantan ஆகிய ஆறு மாநிலங்கள் CMCOவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

Perlis மற்றும் சரவாக்கில் RMCO நீடிக்கின்றது.

மற்றொரு நில்வரத்தில், சொந்த ஊர்களில் இருப்பவர்கள், MCO 2.0 விதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தங்களது வீடுகளுக்கு திரும்ப இன்று வரை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன் பிறகு MCO அமுலாக்கம் கடுமையாக இருக்கும் என Datuk Seri Ismail Sabri தெரிவித்தார்.


நாட்டில் நேற்று மூவாயிரத்து 337 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 15 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

மொத்த சம்பவங்கள் ஏறக்குறைய 75 விழுக்காடு, தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 2.0 விதிக்கப்பட்டுள்ள பகுதிகளை உட்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வங்கி கடன்களுக்கான moratorium சலுகை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டில், பகாங், ஜொகூர், Kelantan, திரங்கானு, பேரா, சபா மற்றும் சரவாக் ஆகிய  மாநிலங்களில் வெள்ளத்தில்  மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, பகாங், ஜொகூர் மற்றும் சபாவில் வெள்ள நிலவரம் சீரடைய தொடங்கியுள்ள நிலையில், சரவாக்கில் வெள்ளம் மோசமடைந்துள்ளது.

சரவாக்கில் மூவாயிரத்து 300க்கும் அதிகமானோர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

ரத்த தானம் செய்ய முன்வருமாறு, தேசிய ரத்த வங்கி பொது மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக A மற்றும் O வகை ரத்த கையிருப்பு குறைய தொடங்கியிருப்பதாக அது தெரிவித்தது.

நாட்டிலுள்ள மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கர்பிணிகள் உள்ளிட்டோரின் தேவையைப் பூர்த்திச் செய்ய, ஒவ்வொரு நாளும், 500 முதல் 600 பைகள் வரைக்குமான ரத்தம் தேவைப்படுவதாகவும் அவ்வங்கி தெரிவித்தது.

SPM உள்ளிட்ட முக்கியப் பொதுத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என, தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் PIBGN கூறியிருக்கின்றது.

தற்போதைய சூழலில், மீண்டும் மீண்டும் தேர்வுக்கான தேதிகளை மாற்றிக் கொண்டே இருப்பது மாணவர்களுக்கு வீண் கவலையை தான் உண்டாக்கும் என, PIBGN தலைவர் இணைப் பேராசிரியர் Datuk Dr Mohamad Ali Hasan கூறுகின்றார்.

COVID-19 சீற்றம் எப்போது தணியும் என தெரியாது; சில மாநிலங்களில் வெள்ளப் பிரச்னையும் தொடர்ந்து நீடிக்கின்றது.

தேர்வெழுதவுள்ள மாணவர்கள் இந்த சவால்களை திடமாக சமாளித்து, தேர்வுகளை முடிப்பதே இப்போதைக்கு சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றாரவர்.

இயன்றவரை, பெற்றோர்கள், தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather