Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கிருமிப் பரவல் மேலும் மோசமாகிவிடலாம்!

Jan 17, 2021


நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில் Covid-19னைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அக்கிருமிப் பரவல் மேலும் மோசமாகிவிடலாம் என சுகாதார அமைச்சு எச்சரித்திருக்கிறது.

அதில் பொதுமக்களின் பங்கு அளப்பரியது.

அவர்கள் வீடுகளிலேயே இருப்பது நல்லது.

அவசரத் தேவைக்காக மட்டும் வெளியே செல்வதோடு தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah வலியுறுத்தினார்.

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயரிய எண்ணிக்கையாக நாலாயிரத்து 29 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

சிலாங்கூர், ஜொகூர், சபா ஆகிய மாநிலங்களில் அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.   

கடந்தாண்டு டிசம்பர் 7 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை நாட்டில் மாநில எல்லைகளைக் கடந்தது தொடர்பில் 19 clusterகள் பதிவாகியுள்ளன.

அந்த 19 clusterகளும் பஹாங், கிளந்தான், திரங்கானு, பேரா, சரவாக் ஆகிய மாநிலங்களை உட்படுத்தியவை என சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அந்த clusterகள் அனைத்திலும் இதுவரை ஆயிரத்து 500க்கும் அதிகமான Covid-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

வரும் 20 ஆம் தேதி தொடங்கும் பள்ளித் தவணையின் போது முக்கியத் தேர்வுகளுக்கு அமரும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குச் செல்வர். 

கடந்தாண்டில் SPM, STPM மற்றும் பிற முக்கியத் தேர்வுகள் எழுத வேண்டிய மாணவர்கள் மட்டுமே ஆசிரியர்களை நேரடியாகச் சந்தித்து கல்வி கற்பர்.

ஆரம்பப் பள்ளி மாணவர்கள், இடைநிலைப் பள்ளியின் முதலாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம் வரை மாணவர்கள் ஆகியோர் வீட்டில் இருந்தே பாடம் படிப்பர் என கல்வியமைச்சு கூறியிருக்கிறது.  

Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் காரணமாக  அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குச் செல்ல மாட்டார்கள் என இதற்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

கெடாவில் நாளை முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமலுக்கு வருவதாகக் கூறி பரவியுள்ள தகவல் உண்மையில்லை.

ஜனவரி 31 ஆம் தேதி வரை அது அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் தேசிய பாதுகாப்பு மன்றம் மறுத்துள்ளது.

எனவே உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

பேரா, Bukit Gantangங்கில் ஆடவர் ஒருவர் சுகாதார அமைச்சின் இளஞ்சிவப்பு கைவளையத்தை அணிந்து நடமாடிக் கொண்டிருந்ததாகக் கூறி பரப்பப்பட்டுள்ள காணொளி உண்மையானது அல்ல என காவல் துறை கூறியிருக்கிறது. 

சம்பந்தப்பட்ட நபர் இளஞ்சிவப்பு கைவளையம் அணிந்திருக்கவில்லை என்றும், அத்தகைய பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது. 

புத்ராஜெயாவில் இலவச கோழி விநியோக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கூட்டரசு பிரதேசத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள நிலையில், அந்நிகழ்வுக்கு அனுமதி பெறப்படவில்லை என காவல் துறை கூறியது.

இலவசமாகக் கோழியைப் பெற அதிகமானோர் வாகனங்களில் வரிசையில் நின்ற புகைப்படங்களும் அவர்கள் SOPக்களைப் பின்பற்றாத புகைப்படங்களும் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather