← Back to list
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்!
Feb 15, 2021
நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மிக அதிகமாக நாலாயிரத்து 500க்கும் அதிகமானோர் Covid-19 கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதிதாக ஈராயிரத்து 176 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக 910 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பத்து பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 975 ஆக உயர்ந்துள்ளது.
Covid-19 பரவலுக்கு மத்தியில் இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் மலேசியர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக ஆதரவாக நடந்து கொள்வது பாராட்டத்தக்கது.
தேச மக்களை ஒன்றுப்படுத்த இத்தகைய பண்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருமாறு பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கேட்டுக் கொண்டுள்ளார்.
“Kita perlu terus menyuburkan sifat empati ini dalam kita hendak memahami isu-isu kaum dari perspektif yang lebih seimbang dan menyeluruh"
2021-2030 தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான நடவடிக்கை திட்ட வரைவை அறிமுகப்படுத்தி உரையாற்றிய போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.
தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் போடப்படும் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் ஒரே வகையைச் சேர்ந்ததாகவே இருக்கும்.
தடுப்பூசி வகையைப் பொதுமக்கள் தேர்ந்தெடுக்க முடியாது.
அது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு, பாதுகாப்பாகவும் ஆக்ககரமாகவும் இருப்பது உறுதிச் செய்யப்பட்டு விட்டதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு கூறியது.
இதனிடையே COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கான கையேட்டை பிரதமர் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் விவரம் தொடங்கி அதன் அமுலாக்கம் வரையிலான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என நம்பப்படுகிறது.
Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் அந்நிய நாட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் முடிவை SUHAKAM வரவேற்றுள்ளது.
அதே சமயம் தங்களைப் பதிந்து கொள்ளாத அந்நிய நாட்டவர்களுக்கும் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக அது கூறியது.
முதல் கட்ட தடுப்பூசித் திட்டம் இம்மாத இறுதி வாக்கில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலாக்காவில் Melaka Tengah Sungai Udang சிறைச்சாலையில் கடுமையாக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 17 ஆம் தேதியில் இருந்து மார்ச் இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதனிடையே பேராவில் Tapah சிறைச்சாலை மற்றும் அதன் ஊழியர் kuartersசில் நாளை தொடங்கி மார்ச் முதல் தேதி வரை EMCO அமல்படுத்தப்படுகிறது.
கிளந்தான், Machangங்கில் Covid-19 பீடித்துள்ள தங்கும் வசதியுடன் கூடிய இடைநிலைப் பள்ளியொன்றைச் சேர்ந்த SPM மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுமார் 260 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டது.
அம்மாணவர்களின் பெற்றோர், சக மாணவர்கள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
வீட்டில் இருந்தே கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைக்குத் தேவையான இலவச தொடர்பு சாதனங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என நெகிரி செம்பிலான் மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
மாணவர்கள் தத்தம் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் வாயிலாக அதற்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், உயர்க்கல்விக் கழக மாணவர்கள், ஆறாம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்படும் என அது கூறியது.
அதற்காக ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதிக்கும் 100 தொடர்பு சாதனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் சாலைத் தடுப்புச் சோதனையின் போது பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகக் கூறப்படுவதில் சம்பந்தப்பட்டிருந்ததாக நம்பப்படும் காவல் வீரர் அப்பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், விசாரணை முடிவடையும் வரை வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக PDRM கூறியது.
மாற்றுத் திறனாளிகள் தங்களது கைவினைப் பொருட்களை விளம்பரப்படுத்த ஏதுவாக இணையம் அகப்பக்கமொன்று ஏற்படுத்தப்படும் என அரசாங்கம் கூறியிருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather