Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அந்நிய நாட்டு தொழிலாளர்களை உட்படுத்தி அதிகமான சம்பவங்கள்!

Feb 06, 2021


நாட்டில் மூன்றாம் கட்டமாக ஏற்பட்டுள்ள COVID-19 பரவல், பெரும்பாலானவை அந்நிய நாட்டு தொழிலாளர்களை உட்படுத்தியிருக்கின்றது.

குறிப்பாக, தொழிற்சாலை, சேசைத் துறை மற்றும் கட்டுமானத் தளங்களை உட்படுத்தி அச்சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

இந்த நிலவரத்தை கருத்தில் கொண்டு, அந்நிய நாட்டுத் தொழிலாளார்களுக்கான தங்குமிட வசதிகள் தொடர்பான பிரச்னைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

சிறைகள் -  தடுப்பு மையங்களில் நிலவும் நெருக்கடி மற்றும் கள்ளக் குடியேறிகள் நாட்டுக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கான எல்லைப் பாதுகாப்பு மீதான அமுலாக்கம் ஆகியவை குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருப்பதாக Dr Noor Hisham கூறினார்.

இந்த விவகாரங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால் தான், COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றாரவர்.

நாட்டில் கொரோனா சம்பவங்களின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது என்பதை தீர்மானிக்க அடுத்து வரும் இரண்டு வார காலக்கட்டம் மிக முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Covid-19: 15 புதிய cluster-கள்!  

நாட்டில் நேற்று COVID-19 தொடர்பான 15 புதிய clusterகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 12 clusterகள் வேலையிடங்களை உட்படுத்தியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

அதில் 5 வேலையிடங்கள் சிலாங்கூரில் உள்ளவை என்றாரவர்.

ஆகக் கடைசியாக நாட்டில் மூவாயிரத்து 300க்கும அதிகமான COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 19 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.

தனியார் துறை மருத்துவர்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி பரிசீலனை!

COVID-19 தொற்றுக்கு ஆளானவர்களை தனியார் துறை சுகாதாரப் பணியாளார்கள் கையாளும் சாத்தியம் குறித்து சுகாதார அமைச்சு பரிசீலிக்கின்றது.

COVID-19 அறிகுறிகள் கொண்டவர்களை தனிமைப்படுத்த உத்தரவிடுவது, அவர்களுக்கு கண்காணிப்புக்கான கைவளையம் அணிவது உள்ளிட்ட அதிகாரத்தை தனியார் துறை மருத்துவப் பணியாளர்களுக்கும் வழங்குவதுப் பற்றி யோசிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தடுப்பூசியை வைக்க 55 இடங்கள்! 

இம்மாத இறுதியில், தேசிய அளவிலான COVID-19 தடுப்பூசி திட்டம் தொடங்கவுள்ள நிலையில், அத்தடுப்பூசிகளை போதிய வசதியுடன் வைத்திருக்க 55 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட இடங்களில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்புகளும் ஏற்பட்டு விடாமல் இருப்பதை உறுதிச் செய்ய TNBயின் ஒத்துழைப்பு நாடப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மற்றொரு நிலவரத்தில், தேசிய தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, Pfizer தடுப்பூசி கையிருப்பை மலேசியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தடுப்பூசி திட்டத்தில் பணியாற்றவுள்ள கிட்டத்தட்ட ஏழாயிரம் பணியாளர்களுக்கு முன்கூட்டியே அத்தடுப்பூசியை செலுத்த அது வகைச் செய்யும் என அமைச்சு கூறியது.


 

SOPயை மீறிய புதுமணத் தம்பதிக்கு தண்டம்!

கெடாவில், MCO விதிமுறைகளை மீறிய 19 பேருக்கு தலா ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் கிட்டத்தட்ட 17 பேருடன் சேர்ந்து கும்பலாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த புதுமணத் தம்பதி அதில் அடங்குவர் என காவல் துறை கூறியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather