← Back to list
Wristband-டை அகற்ற வேண்டாம்!
Jun 12, 2020
தொடர்ந்து கண்காணிக்கப்படும்!
தொடர்ந்து 28 நாட்களுக்கு COVID-19 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்றால் மட்டுமே, மலேசியா அப்பெருந்தொற்றில் இருந்து முழுமையாக விடுப்பட்டிருக்கின்றது என அர்த்தம்!
சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah அதனை தெரிவித்தார்.
"Kalau kita lihat sekarang, untuk tamatkan satu kluster kita memakan masa 28 hari pemantauan, iatu dua kitaran inkubasi. Bermaksud kalau kita ada kes sifar untuk 28 hari, kita akan isytiharkan bebas daripada Covid"
Cluster சம்பவங்கள் முடிவுக்கு வந்துள்ளனவா என்பது, இந்த 28 நாட்கள் கணக்கின் படி தான் முடிவு செய்யப்படும் என்றாரவர்.
நியூசிலாந்தில் தொடர்ந்து 17 நாட்களுக்கு புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகாததை அடுத்து, அந்நாடு அத்தொற்றில் இருந்து விடுப்பட்டிருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருந்த போதிலும், வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழைய இன்னும் அனுமதியில்லை.
இவ்வேளையில், COVID-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர் மீது 13ஆவது நாள் 2ஆவது பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அப்பரிசோதனை முடிவைப் பொறுத்தே அவர்கள் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்படும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் தங்களது தனிமைப்படுத்திக் கொண்டிருப்போருக்கும் இதே நடைமுறை தான் மேற்கொள்ளப்படும் என Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
நாட்டில் நேற்றுப் பதிவான 31 சம்பவங்களில் 11, அண்மையில் எகிப்தில் இருந்து நாடு திரும்பி மலேசியர்களை உட்படுத்தியிருக்கின்றது.
அவர்கள் மலாக்காவில் தனிமைப்படுத்தப்பட்டபோது, 2ஆவது பரிசோதனையில் அவர்களுக்கு அத்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக Dr Noor Hisham சொன்னார்.
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள், wristband எனும் கை மணிக்கட்டில் அணிந்துள்ள அடையாளத்தை அகற்ற வேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றனர்.
அப்படி அகற்றினால் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கலாம் என தற்காப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
- சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 பள்ளிவாசல்களில் இன்று தொடங்கி 40 பேர் வரை தொழுகைகளில் பங்கேற்கலாம் என, மாநில சுல்தான் அனுமதி வழங்கியிருக்கின்றார்.
- மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான இக்காலக்கட்டத்தில், பினாங்கில், தண்ணீரை உட்படுத்தாத பூங்காக்கள், கலை, இசை மற்றும் நடன வகுப்புகள் மற்றும் cybercafes-க்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather