← Back to list
சுற்றுலா துறைக்கு வந்தது விடிவு!
Jun 08, 2020
அரசாங்கம் அறிவித்துள்ள இந்த மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை சுற்றுலாத் துறைக்கு ஒரு விடிவை கொண்டு வந்துள்ளது!
கொடுக்கப்பட்ட இந்த தளர்வுகளுக்கு நன்றி என மலேசிய உள்ளூர் சுற்றுலா சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இனி வரும்ம் காலங்களில் தமது தரப்பு மக்களுக்கு நல்ல நல்ல கழிவுகளை வழங்கி, அதன் மூலம்ம் அவர்களையும் சிரமப்படுத்தாமல், தாங்களும் சுற்றுலாத் துறையை மீட்சிப் பெற செய்ய முடியும் என அவர் சொன்னார்.
நேற்று RMCO அறிவிக்கப்பட்டவுடன் Langkawiயில் 45 நிமிடங்களில் சுமார் 1000 தங்கும் விடுதி அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.
________
வரும் 10ஆம் தேதி தொடங்கி முடி திருத்தும் நிலையங்களைத் திறக்க அரசாங்கம் அனுமதி அளித்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது மலேசிய சிகை திருத்தும் சங்கம்.
அரசாங்கம் தங்களின் சுமையை உணர்ந்து ஒரு வழியாக கடைகளைத் திறக்க அனுமதி அளித்ததற்கு நன்றி என அச்சங்கத்தின் தலைவர் Micheal Poh கூறினார்.
இதனிடையே விதிக்கப்பட்ட SOPக்களை தமது தரப்பு பின்பற்றும் என உத்தரவாதம் அளித்த அவர் பொது மக்கள் தங்களது பாதுகாப்பை எண்ணி எஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
______
Covid-19 பரவல் குறித்து கவனமுடன் இருக்க ஏதுவாக மலாயா பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மற்றும் ஊரியர்கள் மட்டும் நுழைய அனுமதி வழங்கியுள்ளது.
_______
வருகின்ற 15ஆம் தேதி தொடங்கி, இரவுச் சந்தைகள், காலைச் சந்தைகள் உள்ளிட்டவை கட்டங்கட்டமாகத் திறக்க DBKL அனுமதி அளித்துள்ளது.
_____
வணிகத் தளங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற Mysejahtera செயலியைப் பயன்படுத்த வேண்டும்!
வாடிக்கையாளர்களின் பெயர், கைப்பேசி என் உள்ளிட்ட சுய விவரங்களைப் பெற அது எளிதான வழியாகும்.
அதோடு சம்பந்தப்பட்டவர்களை அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளவும் அது வழி செய்யும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather