Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இந்தியாவில் கர்ப்பிணிப் பசு படுகாயம்!

Jun 07, 2020


சிகை திருத்தும் நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்களின் நடத்துனர்களும் ஊழியர்களும் தன்னார்வ முறையில் Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

மலேசிய bumiputra சிகை திருத்தும் சங்கங்களின் தலைவர் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.

தங்களது சேவையைப் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க அது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

வரும் புதன்கிழமையில் இருந்து சிகை திருத்தும் நிலையங்கள், சிகையலங்கார நிலையங்கள் ஆகியவை மீண்டும் செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

எனினும் அவை கடுமையான தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்ற வேண்டும் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் உயராது என தாம் நம்புவதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

நான்கு குடிநுழைவு தடுப்பு மையங்களில் உள்ள அந்நிய தொழிலாளர்கள் மீதான மருத்துவ பரிசோதனை ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருப்பதை அடுத்து அவர் அவ்வாறு கூறினார்.

இதற்கு முன் தடுப்பு மையங்களில் இருந்த அந்நிய தொழிலாளர்கள் மத்தியில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகின.

சம்பவங்களின் எண்ணிக்கை மூன்று இலக்க எண்ணை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கூட்டம் அதிகமுள்ள பொது இடங்களுக்கு சுவாசக் கவசங்களை அணிந்துச் செல்ல பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

சுவாசக் கவசம் அணிவதால், Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருப்பதைச் சுட்டிக் காட்டி சுகாதார தலைமை இயக்குனர் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்கள் குறிப்பாக உடல் நலம் குன்றியவர்கள் சுவாசக் கவசங்களைப் பயன்படுத்துவது நல்லது என்றாரவர்.

 

KLலில் அந்நிய நாட்டவர்களுக்கு Covid-19 பரிசோதனை முடிவு தொடர்பிலான போலிப் பத்திரங்களை வெளியிட்டு வந்த இரு வங்காளதேச ஆடவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.

அக்கிருமித் தொற்று இல்லை என்ற விவரங்கள் அடங்கிய பத்திரங்களுக்கு அவர்கள் தலா 50 ரிங்கிட் கட்டணம் விதித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

சிலாங்கூரில், சில பகுதிகளில் நடத்தப்பட்ட Op Mabuk சோதனைகளில் மதுபோதையில் வாகனமோட்டிய அறுவரைக் காவல் துறை கைது செய்தது.

இந்தியா, கேரளாவில் காட்டு யானை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த உணவை உண்ட கர்ப்பிணிப் பசு கடுமையாகக் காயடைந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.  

அப்பசுவின் உரிமையாளர் புகார் கொடுத்ததை அடுத்து, அவரது அண்டை வீட்டுக்காரர் என நம்பப்படும் நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather