← Back to list
பள்ளிக்குத் தயாராகுங்கள்!
Jun 05, 2020
டெங்கிக் குறித்து கவனம் தேவை!
COVID-19 கிருமித் தொற்றுக்கான போராட்டம் ஒரு பக்கம் இருக்க, டெங்கிச் சம்பவங்கள் குறித்தும் நாம் கவனம் இழக்ககூடாது என சுகாதார துறை தலைமை இயக்குநர் நினைவுறுத்தியிருக்கின்றார்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு டெங்கிச் சம்பவங்கள் எண்ணிக்கையில் 11 விழுக்காடு சரிவு ஏற்பட்டிருக்கின்றது.
இருந்தப் போதிலும், டெங்கிக் காய்ச்சல் குறித்து நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என Datuk Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
“With the MCO, at least you can clean your home and garden. This is something that is doable. So we hope that it continues. Just because of Covid, don’t forget about dengue”
டெங்கிச் சம்பவங்கள் திடீரென அதிகரித்தால், அதனை கையாள்வதற்கான செயல் திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் என்றும் Dr Noor Hisham சொன்னார்.
கொரோனா சம்பவங்கள் அதிகரித்தன!
நாட்டில் நேற்று கொரோனா தொற்று சம்பவங்கள் மீண்டும் 3 இலக்கு எண்ணாக மாறியுள்ளது.
எனினும், 277 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களில், நான்கு மட்டுமே மலேசியர்களை உட்படுத்தியது என Dr Noor Hisham கூறினார்.
நேற்று மேலும் 28 பேர் முழுமையாக அத்தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து, இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆறாயிரத்து 559 பேராக அதிகரித்துள்ளது.
இன்னும் ஆயிரத்து 573 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பள்ளிக்குத் தயாராகுங்கள்!
பள்ளிக்கு திரும்ப தயாராகுமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சொந்த ஊர்களில் இருக்கும் ஆசிரியர்கள், அடுத்த வாரத்திற்குள் பழையபடி தங்களது இடத்திற்கு திரும்புமாறு கூறி, கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது தொடர்பில் இன்னும் எந்தவோர் அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை;
ஆனால் பள்ளிகள் தொடங்கினால் எத்தகைய நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான வழிக்காட்டி முறையை அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.
பொருளாதார மீட்சித் திட்டம்!
COVID-19 பரவலை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க, குறுகிய கால பொருளாதார மீட்சித் திட்டத்தை பிரதமர் அறிவிக்கவுள்ளார்.
அத்திட்டம் இந்த ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் அந்த அறிவிப்பை நேரடியாக, Astro Awani அலைவரிசை 501-றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு காணலாம்.
மருத்துவப் பரிசோதனையா?
சிலாங்கூர் Shah Alam-மிலுள்ள பேரங்காடிக்குச் சென்றவர்களை மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு, தாங்கள் கேட்டுக் கொணடதாக கூறப்படுவதை மாநில சுகாதார துறை மறுத்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOP-யை பின்பற்றாத காரணத்தால் தான் முன்னதாக அப்பேரங்காடியை மூடுமாறு தாங்கள் உத்தரவிட்டதாக அத்துறை தெளிவுப்படுத்தியது.
எனினும், அப்பேரங்காடி தற்போது சுகாதார அமைச்சின் SOP-களுக்கு உட்பட்டு வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது.
BERSATU உச்சமன்றம் கூடியது!
BERSATU உச்ச மன்றம், நேற்றிரவு தனது தலைமையகத்துக்கு வெளியே வேறோர் இடத்தில் கூடியது.
அக்கூட்டத்தில் Tun Dr Mahathir Mohamad கலந்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்படும் என BERSATU கட்சி பொதுச் செயலாளர் Datuk Seri Hamzah Zainuddin கூறியுள்ளார்.
இவ்வேளையில், Pakatan Harapan கூட்டணி கட்சிகள் நேற்றிரவு மீண்டும் கூட்டம் நடத்தியுள்ளன; இம்முறை Datuk Seri Anwar Ibrahim அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
திடீரென அடுத்தடுத்து சந்திப்புகள் நடைபெறுவது அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியா என ஆருடங்களை எழுப்பியுள்ளது.
ஜகார்த்தாவில் தளர்வுகள்!
இந்தோனிசியா Jakarta-வில் கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த இம்மாத இறுதி வரை பேரளவிலான கூடல் இடைவெளி நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில், இன்று தொடங்கி சில சமூக – பொருளாதார நடவடிக்கைகளுக்கு தளர்வுகள் வழங்கப்படுகின்றன.
எனினும், பள்ளிகள், உயர்கல்விக்கூடங்கள், கேளிக்கை மையங்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அனுமதியில்லை.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather