← Back to list
மரித்தது மனிதநேயம்!
Jun 04, 2020
இந்தியா கேரளாவில் பசியால் வாடிய கருவுற்ற யானைக்கு, பட்டாசுகள் கலந்த அன்னாசிப் பழத்தை உண்ணக் கொடுத்த சம்பவம் குறித்து, சமூக ஊடகங்களில் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மனிதனின் அந்த இரக்கமற்றச் செயலை கண்டித்து, hashtag RipHumanity என்ற வாசகம் டிவிட்டரில் trend-டாகி வருகின்றது.
இதனிடையே, இறந்துப் போன அந்த யானைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி மகஜரும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அக்கொடூரக் காரியத்தைச் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என கேரள முதல்வர் முன்னதாக உறுதியளித்திருந்தார்.
இதரச் செய்திகள்......
அந்நிய நாட்டவர்களே அதிகம்!
நாட்டில் நேற்றுப் பதிவான 93 புதிய கொரோனா தொற்று சம்பவங்களில், 2 மட்டுமே மலேசியர்களை உட்படுத்தியது.
எஞ்சிய 91 சம்பவங்கள் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், COVID-19 நோயாளிகளின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் Remdesivir மருந்தின் பலன்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்த தரவுத் தகவல்களை சுகாதார அமைச்சு சேகரித்து வருகிறது.
அம்மருந்து இதுவரை 9 நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதால், அதன் குறிப்பிட்ட தாக்கம் இன்னும் தெரியவரவில்லை என Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.
இருந்த போதிலும், அம்மருந்து குறித்த தகவல்களை அமைச்சு, உலக சுகாதார நிறுவனம் WHO-விடம் தெரிவிக்கும் என்றார்.
இவ்வேளையில், நாட்டில் உளவியலாளரின் எண்ணிக்கை போதவில்லை என்றும் Dr Noor Hisham கூறினார்.
வழக்கமாக, 500 பேருக்கு ஓர் உளவியலாளர் என்ற விகிதம் இருக்க வேண்டும்;
ஆனால் தற்போது, 52 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அவ்வெண்ணிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.
சுகாதார அமைச்சின் கீழ், 148 உளவியலாளர்கள் மட்டுமே பணிப் புரிவதாகவும் Dr Noor Hisham கூறினார்.
உளவியல் ரீதியில் உதவி தேவைப்படுவோருக்கு செயலி வழி ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலை மற்றும் வருமான இழப்பு, உறவுகளில் சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனைக் கேட்டு, இதுவரை ஒன்பதாயிரத்து 300க்கும் அதிகமானவர்கள் அமைச்சின் உதவியை நாடியிருப்பதாக Dr Noor Hisham சொன்னார்.
வாகனமோட்டும் பயிற்சி – SOP முக்கியம்!
வாகனமோட்டும் பயிற்சிக்கு செல்ல விரும்புவோர், COVID-19 கிருமித் தொற்றை தடுப்பதற்கான அறிவிக்கப்பட்டுள்ள SOP-யை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பயிற்சி மையங்களுக்குள் நுழையும் முன்னர், அவர்கள் hand sanitizer திரவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற SOP அதிலடங்கும் என, மலேசிய வாகனமோட்டும் பயிற்றுநர்கள் சங்கம் கூறியது.
இதனிடையே, வகுப்பறை பயிற்சிகளின் போது, ஒரு நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அச்சங்கம் தெரிவித்தது.
பிரதமர் இன்று பணிக்கு திரும்பலாம்!
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னும், அமைச்சரவைக்குப் பிந்திய சந்திப்பில் கலந்துக் கொண்ட அனைத்து 34 அரசாங்க அதிகாரிகளும் இன்று முதல் பணிக்கு திரும்பலாம்.
அதிகாரகளில் ஒருவருக்கு, COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
எனினும், அவர்களுக்கு அத்தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரைப் பறித்த கெட்டுப் போன உணவு!
திரங்கானுவில், puding buih எனும் இனிப்பு பலகாரத்தை உண்டு, நச்சுணவால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது பெண், 10 நாட்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த மாதம், கெட்டுப் போன முட்டைகளால் தயாரிக்கப்பட்ட அந்த puding உணவை உண்டு, ஏறக்குறைய நூறுப் பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி குறித்து கவனம் தேவை!
Clone நிறுவன மோசடி குறித்து கவனமுடன் இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முறையான நிறுவனமொன்றின் பெயர், சின்னம் மற்றும் இதர தகவல்களைப் பயன்படுத்தி, Facebook, WhatsApp மற்றும் Twitter போன்ற சமூக ஊடங்கங்கள் வாயிலாக, போலி முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, ஏமாற்றும் யுக்தியை அம்மோசடிக் கும்பல் பயன்படுத்துவதாக, மலேசியப் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்திருக்கின்றது.
எனவே, எந்த முதலீடு ஆனாலும், பொது மக்கள் ஆணையத்தை நேரடியாக தொடர்புக் கொண்டு, பதிவுப் பெற்ற நிறுவனங்கள் குறித்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
www.sc.com.my என்ற அகப்பக்கத்திலும் அத்தகவல்களை சரிப் பார்க்கலாம்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather