← Back to list
ஒன்றுப்பட்டால் தான் COVID-19-னை அழிக்க முடியும்!
Jun 02, 2020
COVID-19 கிருமித் தொற்று சம்பவங்களை சுகாதார அமைச்சு தொடர்ந்து இவ்வாரம் அணுக்கமாக கண்காணிக்கும்.
அதன் பின்னரே, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் காட்டுப்பாட்டு ஆணையை, ஜூன் 9ஆம் தேதிக்கு பிறகு மீட்டுக் கொள்வதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
“Kalau dalam tempoh seminggu ini kes masih terkawal, kita akan menasihatkan MKN and PM…kalan keadaan ini berlanjutan seperti dua atau satu angka, mungkin kita akan memberi lebih kelonggaran di sector yang lain contohnya sector social, sukan dan pelajaran”
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சின் ஆலோசனைகளை மலேசியர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
அதே போல், அந்நிய நாட்டுத் தொழிலாளர்களும் அதனை பின்பற்றுவதை உறுதிச் செய்ய வேண்டியிருப்பதை Dr Noor Hisham சுட்டிக் காட்டினார்.
அண்மைய வாரங்களில், அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்களில் உள்ள கள்ளக் குடியேறிகளை உட்படுத்தியும் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார்.
எனினும், இந்த சூழ்நிலையை காரணம் காட்டி, அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை ஒதுக்கி, அவர்கள் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும் Dr Noor Hisham மலேசியர்களை அறிவுறுத்தியிருக்கின்றார்.
அனைவரும் ஒன்றுப்பட்டால் தான், இந்த கோறனி நச்சில் தொற்றை முற்றாக அழிக்க முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மற்றொரு நிலவரத்தில், Sungai Buloh சிறையில் கைதிகள், பணியாளார்கள் என ஏறக்குறைய ஆயிரத்து 500 பேர் மீது கொரோனா கிருமித் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த சிறையில், மலேசியர் அல்லாத கைதி ஒருவருக்கு அத்தொற்றுப் பீடித்திருப்பதே காரணம்.
இவ்வேளையில், நாட்டில் தொடர்ந்து பத்தாவது நாளாக COVID-19 கிருமித் தொற்று மரணம் பதிவாகவில்லை.
நேற்றுப் பதிவான 38 புதிய சம்பவங்களில் ஆறு மட்டுமே மலேசியர்களை உட்படுத்தியிருப்பதாகவும், Dr Noor Hisham கூறியுள்ளார்.
நேற்று 51 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து, இதுவரை அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆறாயிரத்து 404 பேராக அதிகரித்துள்ளது.
முடித்திருத்தும் கடைகளை திறக்க இன்னும் அனுமதியில்லை!
மலேசியர்களை உட்படுத்திய கொரோனா சம்பவங்கள் குறைவாகப் பதிவாகி வந்தாலும், முடித் திருத்தும் கடைகளை திறக்க அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
வீடு வீடாக நேரில் சென்று முடித் திருத்தவும் அனுமதி இல்லை என தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
அக்கடைகளை மீண்டும் திறப்பதற்கான தர செயல்பாட்டு நடைமுறை SOP தயாரானப் பின்னர், இறுதி முடிவெடுக்கப்படும் என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
தண்ணீர் கட்டணம் உயர்வு!
பொது மக்களில் சிலருக்கு, மே மாதத்திற்கான தண்ணீர் சேவைக் கட்டணம் சற்று கூடுதலாக இருப்பதற்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதக் கட்டணங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணம் என, தேசிய நீர் சேவை ஆணையம் விளக்கமளித்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழக்கமான முறையைப் பயன்படுத்தி தண்ணீர் பயன்பாட்டு அளவை கணக்கிட முடியவில்லை.
இதனால், அவ்விரு மாதங்களுக்கான கணக்கீடுகள் ஏறக்குறைய மட்டுமே பதிவிடப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather