← Back to list
புதிய அறிகுறிகள் குறித்து கவனம் தேவை!
May 28, 2020
வணிகத் தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நுழையும் முன் உடல் வெப்பத்தைப் பரிசோதிக்கும் நடைமுறை நாட்டில் புதிய வழமையாகக் கருதப்படுகிறது.
ஆயினும் சில சமயங்களில் Covid-19 பீடித்தவர்களும் கடைகளில் நுழைய வாய்ப்புள்ளது எனும் போது உடல் வெப்பத்தை கண்டறியும் கருவி தொடர்பில் கேள்வி எழுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் தாங்கள் பயன்படுத்தும் உடல் வெப்பத்தைக் கண்டறியும் கருவிகள் முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah வலியுறுத்தினார்.
“Peralatan yang kita gunakan, ada syarat syarat ataupun kaedah kaedah penggunaan peralatan tersebut, jadi kalau kita kena patuh kepada peraturan ataupun syarat-syarat yang kita gunakan. Jadi kalau kita nak mengukur suhu contohnya, suhu yang sepatutnya ialah 36.6 sehingga 37.2 itu adalah suhu normal.
மற்றொரு நிலவரத்தில், நாட்டில் Covid-19 பரவலைத் தடுக்க அனைவரும் பங்காற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கம் நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPயைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Covid-19 அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாகக் காணப்படும் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவறைத் தவிர்த்து சோர்வு, வாசனை மற்றும் சுவை உணர்வை இழப்பது போன்றவையும் புதிய அறிகுறிகளாக இருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் எச்சரித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில், Covid-19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகியுள்ளது.
எனினும் அதிக சம்பவங்களுடன் Hulu Langat தொடர்ந்து சிவப்பு மண்டலப் பட்டியலில் உள்ளது.
ஆறு மாவட்டங்கள் மஞ்சள் மண்டலப் பட்டியலிலும் Kuala Langat பச்சை மண்டலப் பட்டியலிலும் இருக்கின்றன.
JBயில் பிரபல பேரங்காடி ஒன்றில் Covid-19 பரவல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள தகவலை மாநில சுகாதாரத்துறை மறுத்துள்ளது.
அப்பேரங்காடிக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு உத்தரவு ஏதும் வெளியிடப்படவில்லை.
அதோடு சம்பந்தப்பட்ட பேரங்காடி இதற்கு முன் மூடப்பட்டதற்கு அது தர செயல்பாட்டு நடைமுறையைப் பின்பற்றாததே காரணம் என்றும் அது விளக்கியது.
இவ்வாண்டு இறுதி வரை அனைத்து உயர்க்கல்விக் கழக மாணவர்களுக்கான கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் இணையம் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என உயர்க்கல்வி அமைச்சு கூறியிருக்கிறது.
நேரடியாக மாணவர்களின் முகம் பார்த்து போதிக்க முடியாது.
ஆனால் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என அமைச்சு விளக்கியது.
இந்தியா, உத்தர பிரதேசத்தில், புதிதாகப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு 'Quarantine’, ‘Sanitizer’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் corona பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படும் வகையில் தங்களது குழந்தைகளுக்கு அப்பெயர்களை வைத்துள்ளதாக அவற்றின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அப்பெயர்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு உணர்வைத் தரும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்களாம்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather