Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

குடிநுழைவு தடுப்பு மையக் கைதிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்

May 27, 2020


நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மூன்று இலக்க எண்ணை எட்டியுள்ள நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் Covid-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறித்து கவலையடைய வேண்டிய அவசியம் இல்லை.

நடப்பில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCOவைத் தொடருவது நல்லது எனக் கூறுகிறார் மலேசிய பொது சுகாதார நிபுணர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar. 

 “Ini bukanlah dipanggil gelombang kedua atau ketiga. Ini berlaku di kalangan kumpulan kumpulan yang fokus iaitu Kumpulan PATI dan pekerja asing. pada pendapat saya pada masa ini tidal peril kembali kepada PKP tetapi kita boleh meneruskan PKPB dengan mengamalkan norma baru.” 

இதனிடையே உலகம் முழுவதும் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை 55 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

3 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருப்பதாக Johns Hopkins Universityயின் புள்ளி விவரம் காட்டுகிறது. 

குடிநுழைவு தடுப்பு மையங்களில் புதிதாகச் சேர்க்கப்படும் கைதிகள் அனைவருக்கும் Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

குடிநுழைவு தடுப்பு மையங்களில் அக்கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருவதைத் தொடர்ந்து சுகாதாரத் தலைமை இயக்குனர் அவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

அம்மையங்களில் எவ்வாறு Covid-19 பரவியது என்பது இன்னமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

நோன்புப் பெருநாளைக் கொண்டாட தமது சொந்த ஊரான கெடாவில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த பொதுச் சேவைத்துறை ஊழியர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மாநில எல்லையைக் கடந்து Putrajaya திரும்ப ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த அவர், தேதியில் மாற்றம் செய்திருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

கெடாவில், அனுமதி இல்லாமல் மாநில எல்லையைக் கடக்க முயன்ற பத்து வாகனமோட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்களுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.  

திரங்கானுவில் சுவாசக் கவசத்தை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 2 ரிங்கிட் 40 சென்னுக்கு விற்ற வணிகர் ஒருவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு விட்டு விபத்தை ஏற்படுத்தி மரணம் விளைவிப்போருக்கு விதிக்கப்படும் தண்டனை தொடர்பிலான சட்டத்தில், திருத்தம் செய்யும் பரிந்துரையைப் போக்குவரத்து அமைச்சு ஆராயவிருக்கிறது. 

ஆகக் கடைசியாக பஹாங், குவாந்தானில் போதையில் இருந்ததாக நம்பப்படும் ஓட்டுனர் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். 

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather