← Back to list
காவல் துறை கண்களில் இருந்து தப்ப முடியாது!
May 23, 2020
மலேசிய முஸ்லீம் அன்பர்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.
அரச முத்திரைக் காப்பாளார் அதனை நேற்றிரவு அறிவித்தார்.
இந்நிலையில், COVID-19 சம்பவங்கள் திடீரென அதிகரித்து விடாமல் இருப்பதை உறுதிச் செய்ய, இப்பண்டிகைக் காலத்திற்காக அரசாங்கம் அறிவித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOP-யை பின்பற்றுமாறு பொது மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
கொடுக்கப்பட்டுள்ள SOP-க்கள் முறையாக பின்பற்றப்படும் பட்சத்தில், கொரோனா சம்பவங்களை ஓர் இலக்கு எண்ணுக்கு குறைக்க முடியும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah நம்பிக்கை தெரிவித்தார்.
கூடல் இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, மற்றும் மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்லாமல் இருப்பது ஆகிய SOP-களை Dr Noor Hisham சுட்டிக் காட்டினார்.
“Kalau boleh kita cuba elakkan kunjung-mengunjung. Kita ada virus, tapi kita tak ada gejala. Dan apabila kita pulang ke kampung, kita mungkin akan menjangkiti orang lain. Jadi kemungkinan besar kita akan membawa virus pulang ke kampung. Melainkan kita uji, baru kita tau kita positif ke tidak.”
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தமது நோன்புப் பெருநாள் கொண்டாட்டம், வழக்கம் போல் மருத்துவ முன்வரிசைப் பணியாளார்களுடன் தான் என்றும் Dr Noor Hisham Abdullah சொன்னார்.
தப்ப முடியாது!
காவல் துறையின் கண்களில் இருந்து தப்பி நோன்புப் பெருநாளுக்கு எப்படியாவது சொந்த ஊருக்கு திரும்பி விடலாம் என முயற்சிக்காதீர்கள்!
அவ்வாறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் தான் மிஞ்சும்.
நாடு முழுவது முக்கிய சாலைகளில் காவல் துறையின் 142 சாலைத் தடுப்புச் சோதனைகள் போடப்பட்டுள்ளதே அதற்கு காரணம்.
எனவே, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தியாவது, balik kampung செய்து விடலாம் என யாரும் கனவு காண வேண்டாம் என காவல் துறை எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கைகளை மீறி, அலட்சியம் காட்டி, மாட்டிக் கொண்டால், உடனடியாக ஆயிரம் ரிங்கிட அபராதம் விதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுமாறு அத்துறை கூறியிருக்கின்றது.
தரை வழி மட்டும் அல்ல, வான் வழிப் பயணிக்க நினைப்போருக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என காவல் துறை கூறியது.
எனவே, தேவையில்லாமல் முயற்சித்து, மாட்டிக் கொண்டு, பின்னர் வருந்த வேண்டாம் என அத்துறை நினைவுறுத்தியது.
கடந்த புதன்கிழமை தொடங்கி இதுவரை, நாடு முழுவதும் மாநிலம் விட்டு மாநிலம் கடக்க முயன்றதன் பேரில், 8 ஆயிரம் வாகனங்கள் வந்த வழியே திருப்பி அனுப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரவில் தங்க முடியாது!
நாளை நோன்புப் பெருநாளின் போது, அரசாங்கம் கொடுத்துள்ள தளர்வைப் பயன்படுத்தி மாநிலங்களுக்குள்ளேயே தத்தம் குடும்பத்தாரை காணச் செல்பவர்கள், இரவு அவ்வீட்டில் தங்க அனுமதியில்லை.
நோன்புப் பெருநாளின் முதல் நாள், அவ்வீடுகளுக்குச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதை தற்காப்பு அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கம் அத்தளர்வை வழங்கியிருந்தாலும், மக்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருப்பது தான் நல்லது என Datuk Seri Ismail Sabri Yaakob கூறியுள்ளார்.
பிரதமருக்கு COVID-19 தொற்று இல்லை!
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னுக்கு COVID-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் சொந்தமாக வீட்டிலேயே 14 நாட்களுக்கு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அண்மைய அமைச்சரவைக்கு பிந்தைய கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதமருக்கு அப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் அனைவரும் கொரோனா கிருமித் தொற்றுக்கானப் பரிசோதனையை மேற்கொண்டு, நேற்று தொடங்கி இரு வாரங்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather