← Back to list
மலேசியாவில் Kawasaki நோய்ப் பரவல் இல்லை!
May 21, 2020
நாட்டில் COVID-19 நோயாளிகள் மத்தியில் Kawasaki நோய்ப் பரவியதாக இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை என, சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.
"Setakat ini Malaysia takde lagi kes yang dikenalpasti sebagai Kawasaki syndrome. Tapi kita sedia maklum dia bukan common. Tapi apa yang pasti ialah kita kena elakkan jangkitan kepada kanak-kanak”
ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் அந்நோய், குறிப்பாக ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஏற்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில், COVID-19 கிருமித் தொற்றுக்கு ஆளான சிறு எண்ணிக்கையிலான சிறார்களுக்கு இந்த Kawasaki நோயை ஒத்திருக்கும் அறிகுறிகள் தென்பட்டதாக, உலக சுகாதார நிறுவனம் WHO-வை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மலேசியாவில் இதுவரை Kawasaki நோய்ப் பரவல் இல்லை என்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கின்றது.
நாட்டில் நேற்று COVID-19 கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களை காட்டிலும், அதிலிருந்து குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.
நேற்று 31 புதிய சம்பவங்கள் பதிவான வேளை, 60 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
ஆயிரத்து 189 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
இதனிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்த பிறகு, நாட்டில் ரத்தக் கையிருப்பு 40 விழுக்காடு குறைந்திருப்பதாக Datuk Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
MCO காலக்கட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டதைக் காட்டிலும், ரத்த சேகரிப்பு 60 விழுக்காடாக மட்டுமே இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
ரத்தக் கையிருப்பு குறைந்து வருவது கவலையளிப்பதாக கூறிய Dr Noor Hisham, மருத்துவமனைகளில் வாரந்திர ரத்தக் கையிருப்புக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
ரமலான் மாதம் முழுவதும் பொது மக்களின் வசதிக்காக தேசிய ரத்த வங்கியின் சேவை நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் Dr Noor Hisham தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், COVID-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி, சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், மாநிலம் விட்டு மாநிலம் வேறு இடங்களுக்கு குறிப்பாக பச்சை மண்டலப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
நோன்புப் பெருநாளுக்கு பிறகு, கொரோனா சம்பவங்கள் அதிகரித்து விடாமல் இருப்பதை உறுதிச் செய்ய அது அவசியம் என Dr Noor Hisham சொன்னார்.
KL-லில் இருந்து Kelantan-னுக்கு பயணித்த கர்பிணி ஒருவருக்கு COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தகவலை அவர் சுட்டிக் காட்டினார்.
சொந்த ஊரில் குழந்தைப் பிரசவிக்கப் போவதாக கூறி அங்குச் சென்ற அப்பெண்ணுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
மாணவரை உட்படுத்திய கொரோனா சம்பவம்!
மற்றொரு நிலவரத்தில், கெடாவில் கொரோனா கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட உயர்கல்விக் கழக மாணவருடன் தொடர்புடைய 9 பேரை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது.
தப்பியோடிய தொழிலாளர்கள்!
சிலாங்கூர் செப்பாங்கில், COVID-19 பரிசோதனைக்கு பிறகு, தாங்கள் கூட்டாக தங்கியிருந்த வீடொன்றில் இருந்து தப்பியோடிய 4 இந்தோனிசிய தொழிலாளர்களை காவல் துறை தேடி வருகிறது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather