Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலும் அதிகமானோர் பூரண குணமடைந்துள்ளனர்

May 20, 2020


நாட்டில் மேலும் 60 பேர் Covid-19னிலிருந்து விடுபட்டு பூரண குணமடைந்துள்ளனர்.

புதிதாக 31 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

புதிய மரணம் ஏதும் பதிவாகவில்லை.

மொத்த மரண எண்ணிக்கை 114 ஆக இருக்கிறது.

தேசிய ரத்த வங்கியில் ரத்த கையிருப்பு 57 விழுக்காடு வரை குறைந்துள்ளது. 

பெருநாள் நெருங்குவதால் விபத்துகள் அதிகமாக நிகழ்வதைச் சுட்டிக் காட்டி சுகாதார தலைமை இயக்குனர் அவ்விவரத்தை வெளியிட்டார். 

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் மலேசியர்கள், கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுவதற்கான 50 விழுக்காட்டு செலவுகளை ஏற்க வேண்டும் என தற்காப்பு அமைச்சு கூறியிருக்கிறது. 

அடுத்த மாதத்தில் இருந்து அது அமலுக்கு வருகிறது. 

மீதம் 50 விழுக்காட்டுச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.

அரசாங்க அலுவலகங்களில் பெரும்பாலானவை மீண்டும் செயல்படத் தொடங்கியிருந்தாலும், வீட்டில் இருந்து வேலை செய்யும் உத்தரவு இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை.

அரசாங்க ஊழியர்களில் ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் இன்னமும் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 40க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

நோன்புப் பெருநாளுக்கு ஊருக்குச் செல்வதாகக் கூறி மாநிலம் விடு மாநிலம் கடக்க முயன்ற மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Petaling Jaya Old Townனில் குடிநுழைவுத்துறை கள்ளக்குடியேறிகளைச் சுற்றி வளைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள அப்பகுதியில் அந்நடவடிக்கையை மேற்கொள்ள காவல் துறையும் உதவுவதாக PJ மாவட்ட காவல் துறை தெரிவித்தது. 

கடந்த வாரம் KL மொத்த வியாபாரச் சந்தையிலும் அதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு உயர்க்கல்விக் கழகங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் இதுவரை தத்தம் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உயர்க்கல்வி அமைச்சு அத்தகவலை வெளியிட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் சமயத்தில், திரங்கானுவில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையில்லை.

நடப்பில் உள்ள வழிகாட்டியைப் பின்பற்றி மாநிலம் விட்டு மாநிலம் செல்லவே தடை விதிக்கப்படுவதாக அம்மாநிலக் காவல் துறை விளக்கியது.

உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பிற செய்திகள்.....

தொலைக்காட்சி பிரபலமும் மாற்றுத் திறனாளி வீராங்கனையுமான Ras Adiba, மேலவையில் இன்று மாற்றுத் திறனாளிகளைப் பிரதிநிதித்து செனட்டராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கெடாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இன்று 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களாகப் பதவி  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather