← Back to list
சிறார்களை அழைத்துச் செல்லாதீர்!
May 18, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிய மரணம் ஏதும் பதிவாகவில்லை.
அவ்வெண்ணிக்கை 113 ஆகவே இருக்கிறது.
புதிதாக 47 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 44 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
பேரங்காடி மற்றும் விற்பனை மையங்களுக்குத் தொடர்ந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு தற்போதைக்கு ஆலோசனை வழங்கப்படும்.
சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr. Noor Hisham Abdullah அதனைத் தெரிவித்துள்ளார்.
சிறார்களுக்கு Covid-19 எளிதாகத் தொற்றலாம் என்பதைச் சுட்டி காட்டி அவர் அவ்வாறு கூறினார்.
KKM dan MKN akan menjalankan kaedah nasihat dulu, sekarang ini kita tengah berbincang bagaimana kita untuk menguat kuasakan, Tetapi kalau tidak berjaya kita akan gunakan kaedah penguatkuasaan.
வர்த்தகத் தளங்களில் நுழையும் முன் பதிவு பாரத்தைப் பூர்த்தி செய்யும் போது, உண்மையான, சரியான விவரங்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தற்காப்பு அமைச்சு அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Covid-19 சம்பவம் ஏதும் உறுதிப்படுத்தப்பட்டால், அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்கு அவ்விவரங்கள் மிக அவசியம் என அது கூறியது.
தீபகற்பத்தில் இன்னமும் உள்ள சபாவைச் சேர்ந்த ஏழாயிரத்து 300 மாணவர்கள் மாநிலம் திரும்பியதும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.
மாநிலம் திருப்பி அனுப்பி வைக்கப்படும் முன் அவர்களுக்கு Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
எனவே மாநிலம் திரும்பியதும் தனிமைப்படுத்தி வைக்கப்படும் மையங்களில் அவர்களைத் தங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தற்காப்பு அமைச்சு கூறியது.
நெகிரி செம்பிலானில் Covid-19 உறுதிப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்த தொழிற்சாலையில் பதனிடப்பட்ட கோழிகள் எனக் கூறி, 12 துரித உணவுகளில் உணவுகள் வாங்க வேண்டாம் எனத் தாங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நெடுகிலும் மோட்டார் வாகன உரிமம் மற்றும் வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு சாலை போக்குவரத்துத் துறை விலக்கு வழங்குகிறது.
எனினும் வாகனத்தில் பயணிக்கும் போது காப்புறுதி பாதுகாப்புப் பத்திரத்தை உடன் கொண்டு செல்ல வேண்டும் என JPJ கேட்டுக் கொண்டது.
Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த, நோன்புப் பெருநாளின் போது திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்த வேண்டாம் என சிலாங்கூர் மாநில சுல்தான் மாநில மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather