Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முஸ்லீம் அல்லாதோரின் வழிபாட்டுத் தளங்கள் திறக்கப்படலாம்!

May 15, 2020


நாட்டில் Covid-19 தொடர்பில் புதிய மரணம் ஏதும் பதிவாகவில்லை.

மொத்த மரண எண்ணிக்கை 112 ஆகவே இருக்கிறது.

மேலும் 88 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 36 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனை அடுத்து மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.

நோன்புப் பெருநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது பிற நாடுகளில் அறிவிக்கப்பட்டது போல் அரசாங்கம் கடுமையான தடைகளை விதிக்க எண்ணவில்லை.

பொதுமக்கள் நடப்பில் உள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றுவதே மிக முக்கியம் என சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார். 

"We would like to advise the public to have a homely closed door Hari Raya. We have to protect our own family, we have to protect our own community. You can have the curfew in your own home for example, to be sure that no outsider from the outside comes into your home, this is a good initiative if you can do that"

பள்ளிகள் மூடப்பட்டுள்ள இக்காலக் கட்டத்தில், சுகாதார கிளினிக்குகளில் மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் இன்னமும் தொடரப்படுகிறது.

அதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

நெகிரி செம்பிலானில் Rembau மாவட்டம் மட்டுமே சிவப்பு மண்டலம் பகுதிகள் பட்டியலில் உள்ளது.

இவ்வேளையில், பினாங்கு, பெர்லிஸ், கிளந்தான், கெடா ஆகிய மாநிலங்களில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, முஸ்லீம் அல்லாதோரின் சமய வழிபாட்டுத் தளங்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படலாம்.

அதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இன்று முதல் கடும் வழிகாட்டிகளுடன் சில பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு நிலையில், அமைச்சர் அவ்வாறு சொன்னார்.

KL, Pudu வின் சுற்று வட்டாரத்தில் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படவில்லை என அமைச்சர் சொன்னார்.

அங்குள்ளவர்களுக்கு Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக பாதுகாப்பு முள் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

சொந்த ஊர்களுக்குத் திருட்டுத்தனமாக மாநிலம் விட்டு மாநிலம் விட்டு செல்லுவோரை PDRM தொடர்ந்து கண்காணித்து வரும்.

மாநிலம் விட்டு மாநிலம் செல்ல பொதுமக்களுக்கு இன்னமும் தடை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி அது அவ்வாறு நினைவுறுத்தியது.  

பஹாங், Chini சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்ய தேர்தல் ஆணையம் முக்கிய தர செயல்பட்டு நடைமுறை SOPயை வெளியிடவிருக்கிறது.

அவ்விடைத் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

Selayang மொத்த வியாபாரச் சந்தையில் Rohingya தரப்பினருக்கும் சில அதிகாரிகளுக்கும் இடையே சண்டை நிகழ்ந்தாகக் கூறி பரவியுள்ள காணொளி உண்மையல்ல என காவல் துறை தெரிவித்திருக்கிறது.

உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கான எரிபொருளின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

RON 95 மற்றும் RON97 பெட்ரோலின் விலை 6 சென் உயர்ந்துள்ளது.

RON95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 31 சென்னுக்கு விற்கப்படும்.

RON97, லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 61 சென்னாகிறது.

டீசல் 5 சென் அதிகரித்து லிட்டருக்கு 1 ரிங்கிட் 40 சென்னுக்கு விற்கப்படும்.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather