← Back to list
Pudu-வில் முள்வேலிகள்!
May 15, 2020
KL Pudu சுற்று வட்டாரப் பகுதியில், COVID-19 கோறனி நச்சில் தொற்றுக்கான பரிசோதனைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதற்காக, அப்பகுதி இன்று அதிகாலை சுற்றி வளைக்கப்பட்டு, அங்கு முள்வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதை KL காவல் துறை தலைவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
Image: FMT
எனினும், அந்த Pudu பகுதி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்ட பகுதிகள் பட்டியலில் வைக்கப்படவில்லை.
இல்லை என அவர் கூறியதாக, சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தக்க காரணங்கள் வைத்திருப்பவர்கள், அப்பகுதிக்குள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அவை கூறியுள்ளன.
இலக்கு வைக்கப்பட்டோருக்கு பரிசோதனை!
அந்நிய நாட்டு தொழிலாளர்கள் மீதான சுகாதார அமைச்சின் கவனம் அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா கிருமித் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக அவர்கள் மீது பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.
“Foreign workers is now one of our targeted group. But we only target them in the red zone. Those in Perlis, for example, which is a green zone…its not necessary for us to test. But if the employer wants to do the screening…by all means”
தற்போதைக்கு, கட்டுமானத் துறைச் சார்ந்த அந்நிய நாட்டு தொழிலாளர்கள் மீது அப்பரிசோதனைகளை தொடர அமைச்சு இலக்கு வைத்திருப்பதாக Dr Noor Hisham சொன்னார்.
அத்துறையை உட்படுத்தி ஏற்கனவே பதிவான கொரோனா கிருமித் தொற்று சம்பவங்களை அவர் சுட்டிக் காட்டினார்.
மற்றொரு நிலவரத்தில், ஒவ்வொரு மலேசியர்கள் என்று அல்லாமல் இலக்கு வைக்கப்பட்ட தரப்பினர் என்ற அடிப்படையில் COVID-19 கிருமித் தொற்றுக்கான பரிசோதனையை அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும், Dr Noor Hisham சொன்னார்.
“If you want to test everyone, the next question is ‘how often do you test?’ Because if you test everyone and you isolate them, that’s fine. But they are still exposed in the community, and the virus is in the community. So instead of testing everyone, we focus on our targeted groups”
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், முதியோர் இல்லங்களில் இருப்பவர்கள், மருத்துவ முன்வரிசைப் பணியாளர்கள் அதிலடங்குவர்.
தாமதமா? LHDN விளக்கம்!
தேசியப் பரிவுமிக்க உதவி நிதி BPN அங்கீகரிக்கப்படவர்களுக்கு, அந்த உதவி சென்றடைய தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவதை, உள்நாட்டு வருவாய் வாரியம் LHDN மறுத்துள்ளது.
நிதியமைச்சு நிர்ணயித்துள்ள காலக் கட்டத்திற்கு ஏற்பவே அந்த உதவி வழங்கப்பட்டு வருவதாக LHDN தெளிவுப்படுத்தியது.
பொய்ச் செய்திகள்!
இவ்வாண்டு தொடங்கி கடந்த திங்கட்கிழமை வரை, நாட்டில் அவதூறு பரப்பும் வகையிலான பொய்ச் செய்திகளைப் பரப்பியது தொடர்பில், 262 விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தகவல்களை பரப்பி நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் கலங்கம் விளைவிக்கும் தரப்பினர் யாராக இருந்தாலும் அரசாங்கம் அணுசரனை காட்டது என உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
JPJ முகப்புகள் திறக்கப்படும்!
நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை தொடங்கி, சாலைப் போக்குவரத்து துறை JPJ சேவை முகப்புகள் திறக்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
தபால் நிலையங்களில் உள்ள முகப்புகளும் அதிலடங்கும்.
உணவுகள் கூடைகள் விநியோகம்!
மார்ச் 18 தொடங்கி இதுவரை நாடு முழுவதும் 3 லட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமான உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 9ஆம் தேதி வரை அவ்விநியோகம் தொடரும் என, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
பள்ளிவாசல்களில் தொழுகை!
கடந்த 2 மாதங்களில் முதன் முறையாக சில மாநிலங்களில் இன்று பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறவுள்ளது.
எனினும், கூடல் இடைவெளி கருதி குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அத்தொழுகையில் கலந்துக் கொள்ள முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather