Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்!

May 14, 2020


Covid-19னில் இருந்து விடுபட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய சம்பவங்களை விட மீண்டும் கூடுதலாகப் பதிவாகியுள்ளது. 

70 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

புதிதாக 40 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 819 ஆகும். 

மேலும் ஒருவர் Covid-19னுக்குப் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

 

மருத்துவப் பணியாளர்களின் விடுமுறைகளை முடக்குவதா இல்லையா என்பது நடப்பு சூழ்நிலையைப் பொருத்தது என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார். 

அண்மைய காலமாக Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாவதை அடுத்து Datuk Dr Noor Hisham Abdullah அவ்வாறு கூறினார்.

நாட்டில் நான்கு மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்கள் இன்னமும் சிவப்பு மண்டலப் பகுதிகள் பட்டியலில் உள்ளன.

நெகிரி செம்பிலானில் Seremban, Rembau, KL, Batu, Kampung Baru, Sri Petaling, சிலாங்கூரில் Petaling, சரவாக்கில் Kuching ஆகியவையே அம்மாவட்டங்கள்.

பஹாங்கில் இதற்கு முன் பச்சை மண்டலப் பகுதிகள் பட்டியலில் இருந்த Pekanனிலும் Rompinனிலும் மீண்டும் தலா ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. 

பணி காரணமாக வெவ்வேறு இடங்களில் இருக்கும் கணவன் -மனைவி நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முடியும். 

எனினும் அதற்கு முன் அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும் என தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார். 

அதே நேரம் அவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே சந்திக்க அனுமதி உண்டு என்றும் அவர் கூறினார். 

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO நெடுகிலும் பொது போக்குவரத்துச் சேவை நடத்துனர்கள் கட்டணத்தை உயர்த்த அனுமதி இல்லை.

பொது போக்குவரத்துச் சேவைகள் தற்போது 50 விழுக்காட்டுப் பயணிகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

எனினும் அவை கட்டணத்தை உயர்த்த முடியாது என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

மற்றொரு நிலவரத்தில், தனிமைப்படுத்தும் மையங்களில் மலேசியர்களுக்கு மட்டுமே இலவச தங்கும் வசதி செய்து கொடுக்கப்படும் என அமைச்சு கூறியது. 

நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் சமூக அட்டை வைத்திருப்போர் அச்செலவுகளைத் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். 

 இவ்வாண்டு எஞ்சியுள்ள பள்ளித் தவணையில் 5 மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பிற மாணவர்களுக்கு அடுத்தாண்டுதான் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் கூறப்படுவதை கல்வியமைச்சு மறுத்துள்ளது.

பள்ளிகளைத் திறக்கும் தேதி தொடர்பில் தகவல் இருந்தால் தமது தரப்பு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என அமைச்சு தெளிவுபடுத்தியது. 

உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.  

நாளை தொடங்கி KL, Labuan, Putrajayaவில் குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் நிபந்தனைகளைப் பின்பற்றி வெள்ளிக்கிழமை தொழுகை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இடத்தைப் பொருத்து 30 பேர் வரை தொழுகையில் ஈடுபடலாம் என சமய விவகார அமைச்சர் தெரிவித்தார். 

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather