← Back to list
நாயை மரத்தில் தொங்க விட்டவருக்குத் தண்டனை!
May 13, 2020
நாட்டில் மேலும் 58 பேர் Covid-19னில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
புதிதாக 37 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் இருவர் உயிரிழந்து மொத்த மரண எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
சிலாங்கூரில், Gombak மாவட்டம் சிவப்பு மண்டலப் பகுதிகள் பட்டியலில் இருந்து மீண்டுள்ளது.
35 Covid-19 சம்பவங்களுடன் அது மஞ்சள் மண்டலப் பகுதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் 61 Covid-19 சம்பவங்களுடன் Petaling மட்டுமே சிவப்பு மண்டலப் பகுதிகள் பட்டியலில் உள்ளது.
நோன்புப் பெருநாளின் போது அரசாங்கம் அறிவித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
சுகாதார தலைமை இயக்குனர் Datuk Dr. Noor Hashim Abdullah அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Jadi kita lihat yg penting kepatuhan SOP, kalau 20 orang di apartment yg kecil mmg tiada penjarakan, yg penting penjarakan social, kerap cuci tangan, pakai mask jika kita berdekatan dengan orang bergejala seperti demam dan selsema.
இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் முதல் நாள் மட்டுமே அண்டை அயலார், உற்றார் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதி உண்டு.
பிற கொண்டாட்டங்களுக்கும் அந்த தர செயல்பாட்டு நடைமுறை SOPயே என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
அதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
திறந்த இல்ல உபசரிப்புகளுக்கும் அனுமதி கிடையாது.
சாலை போக்குவரத்துத் துறை JPJ உட்பட அனைத்து அரசாங்கத் துறைகளும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன.
SOPயைப் பின்பற்றி அவற்றின் செயல்பாடுகள் இருக்கும்.
கிருமி நாசினி திரவத்தை வைத்திருப்பது, கூடல் இடைவெளியை அமல்படுத்துவது ஆகியவையும் அந்த SOPயில் அடங்கும்.
தொழிலாளர்களுக்கு Covid-19 மருத்துவ பரிசோதனை செய்ய MyEG சேவையுடன் ஒத்துழைத்து வருவதாகக் கூறப்படுவதை SOCSO மறுத்துள்ளது.
தங்களின் Prihatin மருத்துவ பரிசோதனைத் திட்டத்திற்கு அகப்பக்கம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அது தெளிவுபடுத்தியது.
சிலாங்கூர், Kajangங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அபாயகரமாக வாகனமோட்டி காவல் வீரர் ஒருவர் மரணமடையக் காரணமாக இருந்ததாகத் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஆடவர் ஒருவர் மறுத்துள்ளார்.
கடந்த மூன்றாம் தேதி LEKAS நெடுஞ்சாலையில் MCO சாலைத் தடுப்பின் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
சிலாங்கூர், Bantingங்கில் தமது வளர்ப்பு நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அதனை மரத்தில் தொங்க விட்ட ஆடவர் மீது இன்று Sepang sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றத்தை ஒப்புக் கொண்ட அவ்வாடவருக்கு நீதிமன்றம் 40 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.
அந்நபர் அபராதத் தொகையைச் செலுத்த முடியாததால் அவருக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் Kajang சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.
முன்னதாக அந்த ஆடவரின் மனிதாபிமானமற்ற செயலின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பலரது கண்டனத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather