← Back to list
உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம்!
May 13, 2020
COVID-19: 2ஆம் கட்டமாக அச்சம்பவங்கள் ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும்!
COVID-19 கோறனி நச்சில் தொற்றை முழுமையாக முறியடிக்க முடியும் என்பதை மலேசியா, இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டும்!
அதே சமயம், 2ஆம் கட்டமாக அப்பெருந்தொற்று சம்பவங்கள் நாட்டில் ஏற்படாமல் இருப்பது உறுதிச் செய்யப்பட வேண்டும் என்றும், சுகாதார துறை தலைமை இயக்குநர் கூறியுள்ளார்.
சீனா மற்றும் தென் கொரியாவில் மீண்டும் புதிதாக கொரோனாத் தொற்று சம்பவங்கள் பதிவாகியிருப்பதை Datuk Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.
நாட்டில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் இவ்விவகாரம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றாரவர்.
இவ்வேளையில், நாட்டில் CMCO-வின் தர செயல்பாட்டு நடைமுறைகள் SOP-யை ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் பின்பற்றுவதாக, தேசிய காவல் படைத் தலைவர் தமக்கு தெரிவித்ததாக Dr Noor Hisham கூறினார்.
இதையடுத்து SOP-யை பின்பற்றாமல் இருக்கும் எஞ்சிய 10 விழுக்காட்டினர் மீது கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
நாட்டில் நேற்று 16 புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்த பின்னர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சம்பவங்களை பதிவு செய்த நாளாகவும் அது அமைந்திருப்பதாக Dr Noor Hisham கூறினார்.
நேற்று 110 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
இன்னும் ஏறக்குறைய ஆயிரத்து 410 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மற்றொரு நிலவரத்தில், சுகாதார அமைச்சின் பணியாளர்களை உட்படுத்தி இதுவரை 11 ஆயிரத்து 470 கிருமித் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் 65 பேருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக Dr Noor Hisham கூறினார்.
பெயரும் – தொடர்பு எண்ணும் போதுமானது!
வர்த்தக தளங்களுக்குள் நுழையும் பொது மக்கள், தங்களது பெயர் மற்றும் தொலைப்பேசி எண்ணை பதிவுச் செய்யுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
அந்த இரு தகவல்கள் போதுமானது என தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இடத்தை உட்படுத்தி யாருக்காவது COVID-19 கோறனி நச்சில் தொற்று ஏற்பட்டால், அங்கு வந்து சென்றவர்களை அடையாளம் காண அந்த தகவல்கள் உதவியாக இருக்கும் என Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
சில வர்த்தக தளங்கள், வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை எண், வீட்டு முகவரி ஆகிய கூடுதல் தகவல்களை சேகரிப்பதாக கூறி வெளியான புகார் குறித்து அவர் கருத்துரைத்தார்.
வீட்டு முகவரி, அடையாள அட்டை எண் ஆகியத் தகவல்களை திரட்டுவது, ஒருவரின் பாதுக்காப்பு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
Gerak Malaysia செயலி வாயிலாக மாநிலங்களுக்கிடையிலான பயண அனுமதியைப் பெற, பெயர், தொடர் எண் ஆகிய இரு தகவல்கள் மட்டுமே திரட்டப்பட்டதையும் Datuk Seri Ismail Sabri Yaakob சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்களை 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கும் நடைமுறை, நாட்டில் கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த பெரிதும் உதவியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில், 300-க்கும் அதிகமானோருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
ஆக, இந்த நச்சுயிரிப் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் யாரையும் சிரமப்படுத்துவதற்காக அல்ல என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம்!
சிலாங்கூரில் இன்று தொடங்கி, உணவகங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதிக்கப்படுவதாக, மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.
எனினும், வாடிக்கையாளர்கள் கூடல் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
உணவக நடத்துநர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம்; ஆனால், கடை வாசல்கள், வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் மேசைகள் போட அனுமதி இல்லை என MB கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather