Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அன்னை முகம் - அன்புக் கரம்!

May 12, 2020


மே 12, இன்று அனைத்துலக தாதியர் தினம்!

உயிரைக் காக்கும் உன்னதப் பணியில் தாதியர்களின் பங்கு அளப்பரியது என்றே கூறலாம்.

மருத்துவர்களின் வலது கையாக திகழும் தாதியர்கள், நோயாளிகளை அன்பினால் அரவணைக்கும் உன்னத உள்ளங்களாகவும் போற்றப்படுகின்றனர்.

Image: icn.ch

அவ்வகையில் இன்றைய சிறப்பு தினத்தில், தாதியர்கள் சிலரை ராகா செய்தி தொடர்புக் கொண்டு பேசியது.

தாதியர் பணிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும், இப்பணியில் தனக்கிருக்கும் உற்சாகம் இன்னும் குறையவில்லை எனக் கூறுகின்றார், கோகிலவாணி டேவிட்.

இந்த தாதிமை தொழிலில் இருக்கும் உள்ளார்ந்த திருப்தியையும் கோகிலவாணி  நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.

கோகிலவாணி டேவிட்

என்னுடைய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் நிறையப் பேர் என்னிடம் வந்து உதவிக் கேட்டுள்ளனர். சிலருக்கு மருந்துகளின் எயர் தெரியாது; சில வயதானவர்கள் எந்தெந்த மருந்து, எத்தனை வேளைக்கு சாப்பிடுவது என்பதை மறந்திருப்பார்கள். அவர்களுக்கு மருந்தின் விவரங்களை கூறி உதவி செய்வேன். சில வீடுகளில் வயதானவர்கள் படுத்த படுக்கையாக இருப்பார்கள். அவர்களின் ‘rice tube’ எனக் கூறிய உணவு குழாய்கள் சில நேரங்களில் கழன்று விடும். அதனை சரி செய்ய கூறி உதவிக் கேட்டும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என் வீடு தேடி வருவார்கள். அந்த பணிகள் தெரியும் என்பதால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். அவ்வகையில் தாதி என்ற முறையில் இப்படி பல உதவிகளை செய்ய முடிவதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன்” என கோகிலவாணி தெரிவித்தார்.

இவ்வேளையில், 8 ஆண்டுகளாக தாதிப் பணியில் இருக்கும் ரேணுகா பரமசிவம் தன்னால் மறக்க முடியாத அனுபவம் பற்றி இவ்வாறு தெரிவித்தார்.

ரேணுகா பரமசிவம்

“நான் தற்போது சுகாதார கிளினிக்கில் பணிப் புரிகின்றேன்.இங்கு பணிக்கு வந்த சில மாதங்களிலேயே மேற்கொண்டு கல்விப் பயில எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பேறுகால மருத்துவப் பயிற்சிக்கான (midwifery course) துறையை தேர்ந்தெடுத்து படித்தேன். அத்துறையில் எனக்கு மறக்க முடியாது அனுபமும் உள்ளது. அதாவது தாய் ஒருவர், ஒரே பிரசவத்தில் அறுவை சிகிச்சை வாயிலாக மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார். அப்போது அந்த பிரசவத்தை நேரில் பார்த்ததோடு, மருத்துவருக்கும் நான் உதவியாக இருந்த அந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாது மிக பெரிய அனுபவம்” என ரேணுகா கூறினார்.

இந்த தாதியர் தொழில், பல அனுபவங்களை மட்டும் கொடுக்கவில்லை;

மாறாக தன்னால் ஆன உதவிகளை மற்றவர்களுக்கு தொடர்ந்து அளிக்கவும் வாய்ப்பளித்திருப்பதாக ரேணுகா சொன்னார்.

இதனிடையே, சிறு வயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையே, தாம் தாதியர் பணிக்கு வரக் காரணம் என்கிறார், செந்தில் குமார் கண்ணியப்பன்.

COVID-19 கிருமித் தொற்றுக்கான முன் வரிசைப் பணியாளருமான இவர், 11 ஆண்டுகளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) பணியாற்றி வருகின்றார்.

அப்பிரிவில் உள்ள சில சவால்கள் பற்றி செந்தில் இவ்வாறு கூறுகின்றார்.

செந்தில் குமார் கண்ணியப்பன்

தற்போது நான் கொரோனா வைரசுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுக்கின்றேன். பொதுவாகவே, இந்த தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது பல்வேறு பணிகளை உள்ளடக்கியிருக்கும். உதாரணத்திற்கு, CPR, early mobilization ஆகியவை அதிலடங்கும். இப்பிரிவில் பணிப் புரியும் போது, நாம் ஒரு நோயாளியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அறிந்து வைத்திருத்தல் அவசியம். ஒவ்வொரு நாளும் சவால்மிக்கதாக இருக்கும். அதுவும் கொரோனா வைரசுக்கான முன்வரிசைப் பணியாளர் என்ற முறையில், முழு சுவாசக் கவசம் PPE பயன்பாடு கூட ஒருவகையில் சவாலாக தான் இருக்கும். இப்பிரிவில் அனுமதிக்கப்படும் சிறுநீரக நோயாளிகளை தொடர்ந்து கவனிக்கவும், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்களை இயக்கும் முறை குறித்தும் அறிந்து வைத்திருத்தல் மிக மிக அவசியமாகும்” என செந்தில் குமார் தெரிவித்தார்.

பல் அறுவை சிகிச்சைப் பிரிவில் 16 ஆண்டுகளாக தாதியாக பணியாற்றி வரும் ஷாமளா நடராஜா தனது பணி குறித்து இவ்வாறு கூறுகின்றார்.

ஷாமளா நடராஜா

நான் வாய் மற்றும் பல் மருத்துவ அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுகின்றேன். இத்துறையில் நான் நிறைய விபத்துகளில் சிக்கியவர்கள், முகத்தில் எலும்பு முறிவுக்கு ஆளானவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பல தரப்பட்ட நோயாளிகளை பார்த்த அனுபவம் பெற்றுள்ளேன். தொடக்கத்தில், இந்த துறையில் பணியாற்றுவது எனக்கு சற்று பதற்றத்தை கொடுத்த போதிலும், தற்போது அனுபவங்கள் அடிப்படையில் இத்துறை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. தாதியாக இருப்பதில் நான் பெருமை அடைகின்றேன்” என ஷாமளா சொன்னார்.

ஆக, இன்றைய தினத்தில் உலகெங்கும் சேவையாற்றும் தாதியர்களின் மகத்தான பணிகளை கௌரவிப்பதானது அவர்களுக்கு நாம் வழங்கக்கூடிய உயர் அங்கீகாரமாக கருதப்படுகின்றது.

முக்கியமாக, COVID-19 கோறனி நச்சில் தொற்றை முறியடிக்கும் நேரடிப் பணியில் ஈடுப்பட்டுள்ள அனைத்து தாதியர்களுக்கும் நமது நன்றிகள் சென்று சேரட்டும்.

அன்னை வடிவமான அனைத்து தாதியருக்கும் ராகா செய்தியின் தாதியர் தின வாழ்த்துகள்.

தொடரட்டும் உங்கள் சேவை

சந்திப்பு  & தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather