← Back to list
உணவு வாயிலாகப் பரவும் என்பதற்கு ஆதாரமில்லை!
May 12, 2020
76 விழுக்காட்டினர் குணமடைந்து விட்டனர்!
நாட்டில் நேற்று மேலும் 88 பேர் COVID-19 கோறனி நச்சில் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து, மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.
அவ்வெண்ணிக்கை 76 விழுக்காடு என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
இதனிடையே, ஆயிரத்து 504 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், ரத்த மாதிரிகளை பயன்படுத்தும் துரித சோதனைக் கருவிகளை, Covid-19 கிருமித் தொற்றை கண்டுப்பிடிக்க பயன்படுத்த முடியாது என்றும் Dr Noor Hisham கூறினார்.
"Ini kerana kehadiran antibodi tidak dapat mengesahkan jangkitan semasa. Keputusan antibodi negatif pula tidak menjamin individu yang diuji tidak dijangkiti Covid-19"
மூக்கு துவாரம் வழியே மேற்கொள்ளப்படும் பரிசோதனை மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறிய அவர், அப்பரிசோதனைகளை பயிற்சிப் பெற்ற மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றார்.
அதுவும் அவர்கள் முழு சுயப் பாதுகாப்புடன் அப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சில தனியார் கிளினிக்குளில் அத்தகைய துரித பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் Dr Noor Hisham கருத்துரைத்தார்.
மற்றொரு நிலவரத்தில், COVID-19 கோறனி நச்சில் தொற்று உணவு வாயிலாகப் பரவும் என்பதற்கு இதுவரை எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை.
இவ்வேளையில், கால்நடைகளிடம் அந்த வைரஸ் தொற்று இருக்கின்றதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த, கால்நடை சேவைத் துறையின் அறிக்கைக்காக சுகாதார அமைச்சு காத்திருப்பதாக, Dr Noor Hisham தெரிவித்தார்.
எது எப்படி இருப்பினும், உண்ணும் உணவை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டியது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
SOP பின்பற்றப்பட வேண்டும்!
பெருநாட்களின் போது, ஒரே மாநிலத்தில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் 20 பேர் வரை ஒன்றுக் கூடலாம் என அண்மையில் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அத்தகைய ஒன்றுக் கூடுதல்களின் போது கூடல் இடைவெளிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியிருக்கின்றார்.
"Apa yang pasti ialah kita kena ikut SOP KKM iatu penjarakan sosial. Jadi dalam apartment, 20 orang itu dah kira confined and crowded space. Jadi number itu ialah relatif...dan bergantung kepada keluarga"
அவ்வாறு ஒன்றுக்கூடுதல்களுக்குச் செல்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்; வழக்கமான கைக்குலுக்கல்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சிறார்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படலாம்!
சிறார்களை பேரங்காடிகளுக்கு அழைத்துச் செல்ல தடை விதிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கின்றது.
சிறார்களின் சுகாதாரத்தை அலட்சியப்படுத்தும் நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டால், அம்முடிவு எடுக்கப்படும் என தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அதற்கான தடை எதுவும் இல்லை; ஆனால், தேவை ஏற்பட்டால் அத்தடை அறிவிக்கப்படலாம் என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், COVID-19 கிருமித் தொற்றுக்கானப் பரிசோதனையை முடித்து விட்ட அந்நிய நாட்டத் தொழிலாளர்களுக்கு சிறப்பு அட்டைகளை வழங்குவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கின்றது.
இதன் தொடர்பில், அரசாங்கம் முதலாளிகளின் ஒத்துழைப்பை நாடலாம் என தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், ஏறக்குறைய 95 விழுக்காட்டினர், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO-வுக்கான அவசியத்தை புரிந்து, அதனை தொடர்ந்து பின்பற்றி வருவது திருப்தியளிப்பதாகவும் அவர் சொன்னார்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather