Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மன நல பரிசோதனை!

May 08, 2020


நெகிரி செம்பிலான், Pedasசில் Covid-19 தொடர்பில் புதிய cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது தொழிற்சாலை ஊழியர்களை உட்படுத்தியது என சுகாதாரத் தலைமை இயக்குனர் கூறினார்.

"Ia mula dikesan seorang kakitangan di kilang itu, didapati tidak sihat gejala demam,batuk dan selsema mulai 5 April 2020"

இன்று 80க்கும் மேற்பட்டோர் Covid-19னில் இருந்து விடுபட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

68 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மரணம் ஏதும் இல்லை; மொத்த மரண எண்ணிக்கை 107 ஆகவே இருக்கின்றது.

பாதுகாவலர்களாக வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் கட்டாயம் Covid-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Cherasசில் பேரங்காடியொன்றில் வேலை செய்த பாதுகாவலர் ஒருவருக்கு Covid-19 பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அது அவ்வாறு கூறியது.

சம்பந்தப்பட்ட பேரங்காடியைத் திறப்பதா இல்லையா என்பது அதன் நிர்வாகத்தைப் பொருத்ததாகும்.

Gerak Malaysia செயலி வாயிலாக விண்ணப்பித்தவர்களில் இன்று 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநிலம் விட்டு மாநில செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பயணங்கள் பேரா, ஜொகூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களை உட்படுத்தியிருக்கின்றது.

சிலாங்கூரில் பச்சை மண்டலப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள முதல் மாவட்டமாக Kuala Langat திகழ்கிறது.

அங்கு புதிய Covid-19 சம்பவங்கள் இல்லை.

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களை மீண்டும் திறப்பது மீதான தர செயல்பாட்டு நடைமுறை SOP குறித்து எந்த தரப்புக்கும் ஆலோசனை கூறவில்லை என தேசிய பாதுகாப்பு மன்றம் MKN தெரிவித்துள்ளது.

அண்மையில் மலேசிய இந்து சங்கம் அத்தகைய SOP எதனையும் வெளியிடவில்லை என்றும் அது வெறும் பரிந்துரை, இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Port Dicksonனில் இரு சந்தைகள் கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யவும் அங்குள்ள வணிகர்களுக்கு Covid-19 மருத்துவ பரிசோதனை செய்யவும் இன்று தொடங்கி இரு நாட்களுக்கு மூடப்படுகின்றன.

ஆயினும் அந்நடவடிக்கைகள் ஏன் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து Port Dickson நகராண்மைக் கழகம் மேல் விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

சிலாங்கூர், Bantingங்கில் தனது வளர்ப்பு நாயை கழுத்தில் கயிற்றைக் கட்டி மரத்தில் தொங்க விட்ட நபர் காவல் துறையின் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அச்சம்பவத்தை மாநில பிராணிகள் நலத் துறை விசாரித்து வருகிறது.

மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்நபருக்கு அடுத்த வாரம் மன நல பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

RON95, RON97, டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 

அடுத்த ஒரு வாரத்திற்கு நடப்பில் உள்ள விலையே நீடிக்கும்.  

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather