Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முடித் திருத்தும் நிலையங்களை திறக்க அனுமதி இல்லை!

May 08, 2020


COVID-19 : சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது!

நாட்டில் COVID-19 கோறனி நச்சில் தொற்றுக்கு ஆளானவர்களில் இன்னும் ஆயிரத்து 584 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுகின்றனர்.

இதுவரை 73.9 விழுக்காட்டினர் அத்தொற்றில் இருந்து குணமடைந்திருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

எண்ணிக்கையில் அது நான்காயிரத்து 776 பேர் என்றும் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

நேற்று அத்தொற்றுக்கு 39 பேர் மட்டுமே ஆளான வேளை 74 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மரணம் பதிவாகவில்லை.

மற்றொரு நிலவரத்தில், COVID-19 புதிய சம்பவங்கள் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முடித்துக் கொள்ளும் சாத்தியம் பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மே 12 ஆம் தேதி முடிவுக்கு வரும் வரை, அச்சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் Dr Noor Hisham சொன்னார்.

கட்டுமானத் தளம் மற்றும் பாதுகாவலர்களை உட்படுத்தி புதிய kluster சம்பவங்கள் பதிவாகியிருப்பதால், கண்காணிப்பு நீட்டிக்கப்பட வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

ஆகப் புதிதாக, பாதுகாவலர்களை உட்படுத்திய கொரோனா தொற்று சம்பங்களில், 9 நேப்பாள நாட்டவர்களும், ஒரு மலேசியரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், முடித் திருத்தும் நிலையங்களை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் முடித் திருத்தும் நிலைய நடத்துநர் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொரோனா தொற்றுப் பரவிய சம்பவங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக, Dr Noor Hisham சொன்னார்.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

நேற்று தொடங்கி மாநிலங்களுக்கிடையே பயணிக்க வழங்கப்பட்டுள்ள 4 நாட்கள் அனுமதியை தவறாகப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அதற்கான பயண அட்டவணையை வாகனமோட்டிகள் பின்பற்ற வேண்டும்.

இல்லையென்றால், வந்த வழியே அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என Bukit Aman எச்சரித்துள்ளது.

ஆயிரம் ரிங்கிட் அபராதம், ஆறு மாதங்களுக்கும் மேல் போகாத சிறை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதையும் Bukit Aman சுட்டிக் காட்டியது.

நேற்று KL-லில் உள்ளவர்கள், தீபகற்பத்தின் இதர மாநிலங்களில் உள்ள தத்தம் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இன்று, Perak, Johor மற்றும் Kelantan-னில் உள்ளவர்கள் தத்தம் வீடுகளுக்கு பயணிக்கலாம்.

விஷவாயு கசிவு!

புகைப்படம்: Fresherslive

இந்தியா, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விஷவாயு கசிவினால் 13 பேர் உயிரிழந்தனர்;  3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கூறுகின்றது.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather